கூட்டுறவு அமைச்சகம்
தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துதல்
Posted On:
27 NOV 2024 4:38PM by PIB Chennai
தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்குவதன் மூலம் வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ரூ.2,516 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை, மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், செயல்பாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களையும் மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய வங்கிகள் மூலம் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் (DCCBs). இதுவரை, 30 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களிலிருந்து 67,930 பிஏசிஎஸ்-ஐ கணினிமயமாக்குவதற்கான முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, இதற்காக ரூ.699.89 கோடி மத்திய அரசின் பங்களிப்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலக் கடன்களுக்கான நிதிச் சேவைகள், கொள்முதல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், வணிகத் திட்டமிடல், கடன்கள், சொத்து மேலாண்மை போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய மாதிரி துணை விதிகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட பொருளாதார நடவடிக்கைகளை உள்ளடக்கிய விரிவான திட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் கூட்டுறவு சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.
---
TS/SV/KPG/DL
(Release ID: 2078137)
Visitor Counter : 4