உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் கைது மோசடி வழக்குகள்

Posted On: 27 NOV 2024 4:42PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் 7-வது   அட்டவணையின்படி   'காவல்துறை', 'பொது ஒழுங்கு' ஆகியவை மாநில விஷயங்கள் ஆகும் . இணையதள குற்றம், டிஜிட்டல் கைது மோசடிகள் உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது, கண்டுபிடிப்பது, புலனாய்வு செய்வது, வழக்குத் தொடர்வது போன்றவை மாநிலக் காவல்துறைகளின் முதன்மையான பொறுப்பாகும். மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களின் முன்முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆலோசனைகளையும் நிதி உதவியையும் அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்துகிறது.

டிஜிட்டல் கைது உள்ளிட்ட சைபர் குற்றங்களைக் கையாள்வதற்கான நடைமுறையை விரிவானதாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் வலுப்படுத்த மத்திய அரசு  நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான சைபர் குற்றங்களையும் ஒருங்கிணைந்து கையாள்வதற்காக 'இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையத்தை' (ஐ4சி) உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2077948

----

TS/PLM/KPG/KR/DL


(Release ID: 2078070) Visitor Counter : 11


Read this release in: English