தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு பிராந்தியத்தில் பிரதமரின் வைஃபை வலைதள சேவை

प्रविष्टि तिथि: 27 NOV 2024 3:28PM by PIB Chennai

நாட்டில் பொது வைஃபை அணுகல் மையங்களை அமைப்பதன் மூலம் இணையதள சேவைகளின் பரவலை விரைவுபடுத்துவதைபிரதமரின் வைஃபை வலைதள சேவைக்கான கட்டமைப்பு குறிக்கோளாக கொண்டுள்ளது. மேலும் டிஜிட்டல் இந்தியாவைக் கட்டமைப்பதும் அதன் பலன்கள் மக்களுக்கு கிடைக்க செய்தலும் நோக்கமாகும். 21.11.2024 நிலவரப்படி நாட்டில் நிறுவப்பட்டுள்ள பிரதமரின் வைஃபை வலைதள சேவைக்கான கட்டமைப்புகளின் மொத்த எண்ணிக்கை 246993.

பிரதமரின் வலைதள சேவைக்கான கட்டமைப்பின் கீழ் பதிவுசெய்யப்பட்ட பொது தரவு அலுவலக திரட்டிகள் அதன் தொழில்நுட்ப வர்த்தக பரிசீலனை அடிப்படையில் இணையதள சேவையை வழங்குகின்றன. 21.11.2024 நிலவரப்படி, வடகிழக்கு பிராந்தியத்தில் தொடங்கப்பட்ட மாநில வாரியான பிரதமரின் வலைதள சேவை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பொது தரவு அலுவலகங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

வரிசை எண்

மாநிலத்தின் பெயர்

வைஃபை எண்ணிக்கை

  1.  

அருணாச்சலப்பிரதேசம்

1017

  1.  

மணிப்பூர்

19

  1.  

மேகாலயா

256

  1.  

மிசோரம்

03

  1.  

நாகாலாந்து

78

  1.  

திரிபுரா

309

 

மொத்தம்

1682

 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

***

TS/SV/RR/KR/DL


(रिलीज़ आईडी: 2077997) आगंतुक पटल : 61
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri