சுரங்கங்கள் அமைச்சகம்
அரிதாக கிடைக்கும் கனிமவளத் தொகுதிகளின் நான்காவது கட்ட ஏலம் நிறைவடைந்தது
Posted On:
27 NOV 2024 3:12PM by PIB Chennai
அரிதாக கிடைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கனிமவளத் தொகுதிகளுக்கான நான்காவது கட்ட மின்னணு ஏல நடைமுறைகளை மத்திய சுரங்க அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 8 கனிமவளத் தொகுதிகளுக்கான நான்காவது கட்ட மின்னணு ஏலம் 2024-ம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நடைபெற்றது. இவை தவிர நான்காம் கட்ட ஏலத்தின்போது கனிமவளத் தொகுதிகளில் மேலும் இரண்டு இந்த ஏலத்துடன் சேர்க்கப்பட்டது.
நான்காவது கட்ட மின்னணு ஏலத்தில் கூடுதல் இரண்டு வெற்றிகரமான கனிமவளத் தொகுதிகளின் முக்கிய விவரங்கள்:
வரிசை எண்
|
வட்டாரத்தின் பெயர்
|
நிலை
|
கனிமப் பெயர்
|
சலுகை வகை
|
விரும்பும் ஏலதாரரின் பெயர்
|
இறுதி விலை சலுகை (%)
|
1
|
போஞ்சி கிராபைட் தொகுதி
|
ஜார்கண்ட்
|
கடுங்கரி
|
மி.லி
|
சத்குரு மைனிங் பிரைவேட் லிமிடெட்
|
752.05%
|
2
|
வடகோல்-அசோலி
நி, சிஆர், கோ மற்றும் தொடர்புடைய மினரல் பிளாக்
|
மகாராஷ்டிரா
|
Ni, Cr, Co மற்றும் தொடர்புடைய கனிமங்கள்
|
சி.எல்
|
அசாம் கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட்
|
07.05%
|
இந்த கனிமவளத் தொகுதிகள் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அமைந்துள்ளன. கிராபைட் மற்றும் நிக்கல் தாது, குரோமியம், கோபால்ட் தாது மற்றும் அவை தொடர்புடைய கனிமங்கள் உள்ளன.
இந்தியாவின் எரிசக்தி மாற்றம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மைக்கு அவசியமான கனிமவளத் தாதுக்களின் விநியோகத்தை உறுதி செய்வதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது. நிலையான வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதிலும், இந்தியாவின் கனிம பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் கருவியாக இருக்கும் அனைத்து பங்குதாரர்களுக்கும் சுரங்க அமைச்சகம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி மின்னணுவியல், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற முக்கிய துறைகளில் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று தற்சார்பு இந்தியாவிற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.
***
(Release ID: 2077889)
TS/SV/RR/KR
(Release ID: 2077970)
Visitor Counter : 9