நிலக்கரி அமைச்சகம்
10 வது சுற்று வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஒன்பது சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டன
Posted On:
27 NOV 2024 12:55PM by PIB Chennai
2024, ஜூன் 21 அன்று வணிக சுரங்கத்திற்கான 10-வது சுற்று நிலக்கரி சுரங்க ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியது. இதில் ஒன்பது நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன.இவற்றில் மூன்று சுரங்கங்கள் கனிமங்கள் கிடைப்பது குறித்து முழுமையாக ஆராயப்பட்ட சுரங்கங்கள்; ஆறு பகுதியளவு ஆராயப்பட்ட சுரங்கங்கள். இந்த ஒன்பது சுரங்கங்களும் சுமார் 3,998.73 மில்லியன் டன் புவியியல் இருப்பைக் கொண்டுள்ளன. இந்த சுரங்கங்களின் அதிகபட்ச மதிப்பீட்டுத் திறன் ஓரளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்களைத் தவிர்த்து ஆண்டுக்கு 14.10 மில்லியன் டன்னாக இருக்கும்.
இந்த சுரங்கங்கள் ரூ. 1,446 கோடி (ஓரளவு ஆராயப்பட்ட சுரங்கங்களைத் தவிர்த்து) ஆண்டு வருவாயை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ. 2,115 கோடி மூலதன முதலீட்டை ஈர்க்கும். 19,063 வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
2020 ஆம் ஆண்டில் வணிக நிலக்கரி சுரங்க ஏலம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஆண்டுக்கு 257.60 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்ட மொத்தம் 113 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டுள்ளன. இந்த சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வந்தவுடன், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், நிலக்கரித் துறையில் நாடு தற்சார்படையவும் பெரிதும் பங்களிக்கும். ஒட்டுமொத்தமாக, இந்த சுரங்கங்கள் ரூ .35,437 கோடி ஆண்டு வருவாயையும், ரூ .38,641 கோடி மூலதன முதலீட்டையும், நிலக்கரி உள்ள பிராந்தியங்களில் 3,48,268 பேருக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய முன்முயற்சிகள், நிலக்கரித் துறையை பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய உந்து சக்தியாக மாற்றுவதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இந்த முன்முயற்சிகள், நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, பொருளாதார நிலைத்தன்மையை அதிகரிப்பதற்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தற்சார்பு இந்தியா என்ற பார்வைக்கு பங்களிப்பு செய்வதற்கும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077800
TS/SMB/KV/KR
*****
***
(Release ID: 2077831)
Visitor Counter : 15