சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கரையோர கடல்பகுதியில் உள்ள கனிம வள சுரங்கங்களின் முதலாவது ஏல நடைமுறைகள் தொடக்கம்

Posted On: 27 NOV 2024 11:10AM by PIB Chennai

நாட்டின் கரையோரக் கடல்பகுதிகளில் உள்ள கனிம வள சுரங்கங்களின் முதலாவது ஏல நடைமுறைகளை மத்திய சுரங்க அமைச்சகம் இம்மாதம் 28-ந் தேதி தொடங்க உள்ளது. அரசின் குறிப்பிடத்தக்க ஒரு முன்முயற்சியாக கடலுக்கு அடியில் உள்ள கனிமவள ஆதாரங்களை எடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் 2 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு ஏராளமான கனிமவளங்கள் உள்ளன. இதனை பாதுகாக்கும் வகையில் பொருளாதார மற்றும் உத்திசார் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கோபால்ட், நிக்கல் உள்ளிட்ட அரிய வகை கனிமங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், நாட்டில் கிடைக்கும் கனிமவளங்களைக் கொண்டு உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கரையோர கடல் பகுதிகளின் கனிமவள மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2002-ல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் கடலோரப் பகுதிகளில் உள்ள கனிமவள சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய கனிமவள ஆதாரங்களை வெட்டியெடுப்பதற்கான உரிமங்கள் மற்றும் உற்பத்திக்கான குத்தகைகளுக்கு அனுமதி அளிக்கும் நடைமுறைகளை சீரமைப்பதற்கு இந்தச் சட்டத் திருத்தம் வகை செய்கிறது.

***

(Release ID: 2077785)
TS/SV/RR/KR

 


(Release ID: 2077827) Visitor Counter : 25


Read this release in: English , Urdu , Marathi , Hindi