அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஐ.நா- ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உலகளாவிய புவிவெளிசார் தகவல் மேலாண்மை மாநாடு
Posted On:
26 NOV 2024 4:07PM by PIB Chennai
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நமது வளங்களை திறம்பட மற்றும் பொறுப்புடன் நிர்வகிப்பதற்காக சிறந்த நடைமுறைகள் மற்றும் பயன்பாட்டு உதாரணங்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை உறுதி செய்வது என்பது பிராந்திய ஒத்துழைக்கு அவசியமானது என்று ஐநா- ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உலகளாவிய புவிவெளிசார் தகவல் மேலாண்மை மாநாட்டில் காணொளி செய்தி மூலம் எடுத்துரைத்தார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான புவி-அடையாள தரவு பொருளாதாரம் குறித்த இம்மாநாடு, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் புவிசார் வல்லுநர்களை ஒன்றிணைத்தது. இதில் ஐரோப்பா, அமெரிக்கா, அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணர்களுடன் கூட்டு அமர்வு இடம்பெற்றது.
"ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் புவிசார் திறன்களை வலுப்படுத்த இந்தியா ஆழமாக உறுதிபூண்டுள்ளது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், நாம் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளலாம், பொதுவான தளங்களை உருவாக்கலாம் மற்றும் நமது பிராந்தியம் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆசிய-பசிபிக் பிராந்தியம் பல்வேறு பொருளாதாரங்கள் மற்றும் கலாச்சாரங்களின் தாயகமாக உள்ளது என்றும், புவிசார் தரவுகளை திறம்பட பயன்படுத்துவது உள்ளடக்கிய வளர்ச்சி, வளங்களுக்கான சமமான அணுகல் மற்றும் அனைவருக்கும் நிலையான வளர்ச்சியை உறுதிப்படுத்த உதவும் என்றும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் புவிசார் திறன்களை வலுப்படுத்த இந்தியா ஆழமாக உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
30 நாடுகளைச் சேர்ந்த சுமார் 90 சர்வதேச பிரதிநிதிகளுடன், இந்தியாவிலிருந்து 120 பிரதிநிதிகளுடன், இது அறிவைப் பகிர்வதற்கும், புவிசார் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைப் பற்றி விவாதிப்பதற்கும், உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா- ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உலகளாவிய புவிசார் தகவல் மேலாண்மையின் பிற பிராந்திய குழுக்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும் ஒரு தளத்தை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2077449
***
TS/IR/AG/KR
(Release ID: 2077528)