சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பயிர்க்கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு
Posted On:
25 NOV 2024 5:20PM by PIB Chennai
தில்லி மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு என்பது அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மனித தவறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் கூட்டு விளைவாகும். இது வாகனங்கள் தொழில் நிறுவனங்கள் வெளியிடும் புகைகள், கட்டுமானம் மற்றும் கட்டட இடிபாடுகள் போன்றவை காரணமாக ஏற்படும் மாசுபாடு தூசி, பயிர்க் கழிவுகளை எரிப்பது, நகராட்சி திடக்கழிவு, நிலப்பரப்புகளில் ஏற்படும் தீ போன்ற காரணிகளால் காற்று மாசு ஏற்படுகிறது.
பருவமழைக்கு பிந்தைய மற்றும் குளிர்காலங்களில் நிலவும் குளிர்ச்சியான சூழல் காரணமாக, காற்றின் சுழற்சி குறைவதன் காரணமாக மாசு ஏற்பட வழிவகுக்கின்றன, இதனால் இப்பகுதியில் அதிக மாசுபாடு ஏற்படுகிறது. பயிர்க் கழிவுகளை எரித்தல், பட்டாசு வெடித்தல் போன்ற நிகழ்வுகளால் ஏற்படும் புகை காரணமாகவும் காற்றின் தரம் மேலும் மோசமடைகிறது.
வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயிர்க்கழிவுகளை எரிக்கும் சம்பவங்கள் குறிப்பாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காற்று மாசுபாடு கவலைக்குரியதாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076918
***
TS/VS/KV/RR/DL
(Release ID: 2077081)
Visitor Counter : 8