கலாசாரத்துறை அமைச்சகம்
கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்கள்
Posted On:
25 NOV 2024 6:21PM by PIB Chennai
இந்திய கலை, கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்காக பல்வேறு நாடுகளுடன் கலாச்சாரப் பரிமாற்ற திட்டங்களில் கலாச்சார அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
கலாச்சார பரிமாற்றத் திட்டங்கள் மற்ற நாடுகளுடனான இந்தியாவின் பன்முக கலாச்சார உறவுகளை வலுப்படுத்த வகை செய்கின்றன. இசை, நடனம், நாடகம், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், ஆவணக் காப்பகங்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், போன்ற அம்சங்களில் பிற நாடுகளுடன் கலாச்சார பரிமாற்றங்களுக்கு இந்த திட்டங்கள் உதவுகின்றன.
தற்போதைய நிலவரப்படி கலாச்சார அமைச்சகம் 84 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறும் இந்திய திருவிழாக்கள் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை எடுத்துரைக்க உதவுகிறது.
வெளிநாடுகளில் இந்திய திருவிழாக்கள் கீழ்க்கண்ட நோக்கங்களுடன் நடத்தப்படுகின்றன:
- வெளிநாடுகளில் இந்திய கலாச்சாரத்தை ஊக்குவிப்பது
- இந்தியாவுடன் வெளிநாடுகளின் உறவை வலுப்படுத்துதல்
- இருதரப்பு கலாச்சார தொடர்புகளை மேம்படுத்துதல்
- இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
2013-14-ம் ஆண்டு முதல் தற்போது வரை 59 நாடுகளில் இந்தியாவின் 62 இந்திய கலாச்சார விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சார - சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2077063)
Visitor Counter : 11