வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ரியல் எஸ்டேட் தொழில் துறை வேகமாக வளர சீரிய முறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் -மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்
Posted On:
25 NOV 2024 5:30PM by PIB Chennai
ரியல் எஸ்டேட் தொழில் துறை வேகமாக வளர உதவும் பெரிய, சீரிய முறைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு) 25-வது நிறுவன தின விழாவில் அவர் பங்கேற்றுப் பேசினார். காப்பீடு, வருங்கால வைப்பு நிதி ஆகியவற்றின் சமூக பாதுகாப்பு பலன்களை வழங்கி, முறையான வேலைவாய்ப்பில் தொழிலாளர்களை ஈடுபடுத்துமாறு அவர் கட்டுமான தொழில்துறையினரை வலியுறுத்தினார்.
கிரெடாய் அமைப்பு தனது 14,000 உறுப்பினர்களை முறைப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். நாட்டின் பெருநகரங்களில் சிறந்த கட்டுமான தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கான வழிகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைப்பது குறித்தும் பரிசீலிக்குமாறு கிரெடாய் அமைப்பை அவர் வலியுறுத்தினார். எஃகு, ப்ரீகாஸ்ட் ஃபேப்ரிகேஷனை ஏற்றுக்கொள்வது கட்டுமானத்தை விரைவுபடுத்தும் என்றும், இது முழு அமைப்புக்கும் பயனளித்து மாசு அளவைக் குறைக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
சொந்தமாக வீடு வாங்குவதில் மக்கள் முன்பு எதிர்கொண்ட சிரமங்களை சுட்டிக்காட்டிய திரு பியூஷ் கோயல், கடந்த பத்து ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதால், இவை மக்கள் எளிதில் வீடுகளைப் பெற உதவியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
ரியல் எஸ்டேட் தொழில்துறையை 1 டிரில்லியன் டாலர் துறையாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.
***
TS/PLM/AG/DL
(Release ID: 2077026)
Visitor Counter : 9