தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner
0 6

ஐ.எஃப்.எஃப்.ஐ 2024-இன் படங்களான 'அமர் ஆஜ் மரேகா' மற்றும் 'ஸ்வர்கராத்' ஆகியவை வாழ்க்கை, இறப்பு மற்றும் நகைச்சுவையை தனித்துவமான கதைகளுடன் ஆராய்கின்றன

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) அமர் ஆஜ் மரேகா (இந்தி) மற்றும் ஸ்வர்கராத் (அசாமி) ஆகிய இரண்டு படங்களின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கோவாவின் பனாஜியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகங்களிடையே உரையாற்றினர்.

 

முதல் முறை இயக்குநரான ரஜத் லக்ஷ்மன் கரியா, அமர் ஆஜ் மரேகாவை உயிர்ப்பித்த தனது திரைப்பயணத்தை பகிர்ந்து கொண்டார். காகிதத்தில் ஒரு கனவாகத் தொடங்கிய ஒரு கதை, இயக்குனர் கரியாவின் படமாக ஐ.எஃப்.எஃப்.ஐ.ல் பங்கேற்க வழிவகுத்தது. அவரது தயாரிப்பாளர் பிரகாஷ் ஜா மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்திற்கு (என்.எஃப்.டி.சி) இந்த திரைப்படம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். புதிய திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கு கரியா நன்றி தெரிவித்தார்

படம் மரணம் என்ற நுட்பமான விஷயத்தை நேர்மறையான திருப்பத்துடன் கையாள்கிறது. அதன் தலைப்பு "அமர் இன்று இறந்துவிடுவார்" என்று தோன்றினாலும், படம் "மரணம் என்பது வாழ்க்கையின் கொண்டாட்டம்" என்ற செய்தியை தெரிவிக்கிறது.

 

மரணம் என்ற தீவிரமான விஷயத்தை நகைச்சுவையைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட 'ஸ்வர்கராத்' படத்தை உருவாக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து இயக்குநர் ராஜேஷ் புயான் பேசினார். நகைச்சுவை, பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமான வகையாகும் என்பதை புயன் வலியுறுத்தினார். வாழ்க்கை, இறப்பு மற்றும் சமூக மதிப்புகள் பற்றிய எண்ணங்களைத் தூண்டும் அதே நேரத்தில் மக்களை சிரிக்க வைக்கும் திறனுக்காக படத்தை அவர் பாராட்டினார். படத்தின் விமர்சன மற்றும் வணிக வெற்றியைப் பிரதிபலிக்கும் புயான் அசாமிய திரைப்படத் துறையில் அதன் தாக்கத்தையும், அதிரடி மற்றும் காதல் மீதான பிராந்தியத்தின் பாரம்பரிய கவனத்திலிருந்து விலகியதையும் சுட்டிக்காட்டினார். கோவிட் -19 பெருந்தொற்றின் உச்சத்தில் படமாக்கப்பட்ட அசாமிய திரைப்படத்தின் தயாரிப்பின் போது எதிர்கொள்ளப்பட்ட  சவால்களை ஸ்வர்கராத்தின் தயாரிப்பாளர் அக்ஷதா நரேன் பகிர்ந்து கொண்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076668

 TS/BR/KR

(Release ID: 2076668)

***

iffi reel

(Release ID: 2076767) Visitor Counter : 6