தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐ.எஃப்.எஃப்.ஐ: தெற்கிலிருந்து வங்காளம் வரை, கனவுகள் மற்றும் போராட்டக் கதைகள் திரைப்பட ஆர்வலர்களைக் கவர்கின்றன
55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐ.எஃப்.எஃப்.ஐ) 'அம்மாவின் பெருமை' (அம்மாஸ் ப்ரைட்) மற்றும் 'ஓன்கோ கி கோதின்' ஆகிய இரண்டு முன்மாதிரியான படங்கள் நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த சினிமா ஆர்வலர்களால் பாராட்டப்பட்டன. கோவாவின் பனாஜியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஊடகவியலாளர்களுடன் உரையாடினர்.
அம்மாவின் பெருமை: நெகிழ்ச்சி மற்றும் பெருமையின் பயணம்
ஐ.எஃப்.எஃப்.ஐ-இல் இந்த ஆண்டு திரையிடப்பட்ட ‘அம்மாவின் பெருமை’ படம், ஒரினப் பால்புதுமையினர் தொடர்பான படமாகும். வாழ்நாள் முழுவதும் தனது கண்ணியம் மற்றும் பெருமைக்காக போராடும் ஒரு திருநங்கையின் தத்ரூபமான சித்தரிப்பாக இந்தப் படம் அமைந்துள்ளது.
இந்தியன் பனோரமாவில் திரைப்படம் அல்லாத பிரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் குறும்படம், தென்னிந்தியாவைச் சேர்ந்த இளம் திருநங்கை ஸ்ரீஜா எதிர்கொண்ட சோதனைகள் மற்றும் இன்னல்களைச் சித்தரிக்கின்றது.
தனது படம் குறித்து ஊடகங்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் ஷிவ் கிரிஷ், திருநங்கைகளின் பிரச்சினைகளை சித்தரிக்கும் படங்கள் மிகக் குறைவு என்பதை எடுத்துரைத்தார்.திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற இந்தப்படம், இந்த ஆண்டு கனடாவில் நடந்த சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த பால்புதுமையின திரைப்படத்திற்கான ஷெர் வான்கூவர் விருதை வென்றுள்ளது. இது 64-வது கிராகோவ் திரைப்பட விழா, உட்ஸ்டாக் திரைப்பட விழா 2024, சர்வதேச தெற்காசிய திரைப்பட விழா கனடா 2024 மற்றும் இது போன்ற பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களால் பாராட்டப்பட்டுள்ளது.
ஓன்கோ கி கோதின் - துன்பங்களுக்கு இடையில் கனவுகள்
'ஓன்கோ கி கோதின்' என்ற பெங்காலி திரைப்படமும் இந்தியன் பனோரமா பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு தற்காலிக மருத்துவமனையைக் கட்டியெழுப்பும் மூன்று ஏழை குழந்தைகளின் கதையை இந்தப் படம் விவரிக்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் அனைத்து முரண்பாடுகளையும் மீறி தங்கள் கனவுகளை அடைவார்களா என்ற கேள்வியுடன் கதை முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076690
TS/BR/KR
(Release ID: 2076690)
***
(Release ID: 2076750)
Visitor Counter : 5