நிதி அமைச்சகம்
'8.03% இந்திய அரசின் இந்திய உணவுக்கழக சிறப்புப் பத்திரங்கள் 2024'-ன் நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துதல்
Posted On:
22 NOV 2024 5:20PM by PIB Chennai
'8.03% இந்திய அரசின் இந்திய உணவுக்கழக சிறப்புப் பத்திரங்கள் (GOI FCI SPL BONDS) 2024'-ன் நிலுவைத் தொகை டிசம்பர் 13, 2024 அன்றைய முகமதிப்பில் திருப்பிச் செலுத்தப்பட உள்ளது. (டிசம்பர் 14 மற்றும் 15, 2024 முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை நாட்கள் என்பதால்) குறிப்பிட்ட தேதியிலிருந்து சிறப்புப் பத்திரங்களுக்கு வட்டி எதுவும் சேராது. ஆணை முறிச் சட்டம், 1881-ன் கீழ் எந்தவொரு மாநில அரசும் திருப்பிச் செலுத்தும் நாளில் விடுமுறை அறிவித்தால், அந்த மாநிலத்தில் உள்ள பணம் செலுத்தும் அலுவலகங்களால் முந்தைய வேலை நாளில் கடன்(கள்) திருப்பிச் செலுத்தப்படும்.
சம்பந்தப்பட்ட பத்திரங்களுக்கு பணம் செலுத்தும் நோக்கத்திற்காக, அத்தகைய அரசுப் பத்திரங்களின் மூல சந்தாதாரர்கள் அல்லது பின்னர் அதன் உரிமையாளர்கள், அவர்களது வங்கிக் கணக்கின் விபரங்களை நன்கு முன்கூட்டியே சமர்ப்பித்தல் வேண்டும்.
இருப்பினும், வங்கிக் கணக்கு பற்றிய உரிய விவரங்கள் / மின்னணு முறையில் கடன் பெறுவதற்கான கட்டாயம் இல்லாத நிலையில், தவணை தேதியில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வசதியாக, பொதுக் கடன் அலுவலகங்கள், கருவூலங்கள் / சார் கருவூலங்கள் மற்றும் வட்டி செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் திருப்பிச் செலுத்துவதற்கான கெடு தேதிக்கு 20 நாட்களுக்கு முன்னதாக பத்திரங்களை சமர்ப்பிக்கலாம்.
விடுவிப்புப் பெறுமதியைப் பெறுவதற்கான நடைமுறை பற்றிய விபரங்களை மேற்கூறப்பட்ட பணம் செலுத்தும் அலுவலகங்களில் எவற்றிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2076037
***
TS/SMB/RS/DL
(Release ID: 2076106)
Visitor Counter : 25