தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள படேல் நகரில் மாநில அரசின் முகாமில் 13 கைதிகள் நோய்வாய்ப்பட்டு 3 பேர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது

Posted On: 21 NOV 2024 6:16PM by PIB Chennai

பீகார் மாநிலம்  பாட்னாவில் உள்ள படேல் நகர் பகுதியில், 2024 நவம்பர் 7 முதல் 11 வரை, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான தங்குமிடம் ஒன்றில், 13 பெண் கைதிகள் நோய்வாய்ப்பட்டதுடன், மூன்று பேர் கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தனர் என்ற ஊடக செய்தியை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இரவு உணவு சாப்பிட்ட பின்னர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கைதிகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (பி.எம்.சி.எச்) அனுமதிக்கப்பட்டனர். இந்த தங்குமிடம் பீகார் அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் இயக்குநரகத்தால் நிதியளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஊடக செய்தியின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றிய கடுமையான பிரச்சினையை எழுப்புவதாக ஆணையம் கருதுகிறது. இல்லவாசிகளின் சட்டபூர்வமான பாதுகாவலர்கள் என்ற முறையில், இல்லவாசிகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது பாதுகாப்பு இல்ல அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அதன்படி, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு பீகார் அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075582

 

***

MM/RS/DL


(Release ID: 2075627) Visitor Counter : 8


Read this release in: English , Urdu , Hindi