அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும், உகந்ததாகவும் பயன்படுத்த வேண்டும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
Posted On:
20 NOV 2024 6:16PM by PIB Chennai
"செயற்கை நுண்ணறிவு ஒரு அத்தியாவசிய கருவியாகும், ஆனால் பொறுப்பான கையாளுதலுடன் உகந்ததாக பயன்படுத்தப்பட வேண்டும்" என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (அசோசெம்) செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவ கூட்டம் 2024-ல் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார். "இந்தியாவுக்கான செயற்கை நுண்ணறிவு: இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டை மேம்படுத்துதல் - புதுமை, நெறிமுறைகள் மற்றும் ஆளுகை" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, செயற்கை நுண்ணறிவின் உருமாறும் திறனைப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் திட்டமிடுதலை வெளிப்படுத்தியது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், ஆளுகை, வணிகம், சுகாதாரம், கல்வி மற்றும் விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மறுவடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியின் முதுகெலும்பாக செயற்கை நுண்ணறிவு இருப்பதாகவும், பொருளாதார வளர்ச்சியை இயக்கும் திறன் கொண்டதாகவும், பருவநிலை மாற்றம், பொதுச் சேவை வழங்கல் மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.
செயற்கைக்கோள், ஆளில்லா விமானம் ஆகியவற்றின் நிகழ்நேர பகுப்பாய்வு மூலம் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தரவு வங்கியின் முக்கியத்துவத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2047-ம் ஆண்டிற்குள் இந்தியா உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தலைமைத்துவமாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075176
***
IR/AG/DL
(Release ID: 2075225)
Visitor Counter : 16