அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வடிவமைக்கப்பட்ட ஃபுளோரோஜெனிக் சோதனைகளைப் பயன்படுத்தி எச்.ஐ.வி மரபணுவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறிய புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது
Posted On:
20 NOV 2024 3:34PM by PIB Chennai
தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட புளோரோஜெனிக் சோதனைகளைப் பயன்படுத்தி எச்.ஐ.வி. மரபணுவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது நோயறிதலில் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது. எச்.ஐ.வி. கண்டறிதலில் ஏற்படும் தவறான முடிவுகளைக் கணிசமாகக் குறைப்பதை இந்த நோயறிதல் முறை உறுதிசெய்கிறது.
நோயெதிர்ப்புசக்திக் குறைபாடு நோய்க்குக் (எய்ட்ஸ்) காரணமான நோயெதிர்ப்புசக்திக் குறைபாடு வைரஸ் வகை 1 (எச்.ஐ.வி -1), மனித ஆரோக்கியத்திற்கு தொடர்ச்சியான உலகளாவிய அச்சுறுத்தலாக உள்ளது. பரவலாகப் பயன்படுத்தப்படும் எச்.ஐ.வி நோயறிதல் முறையில் ஆரம்பகால நோய்த்தொற்றுகளைத் தவறவிடும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் நோய்த்தொற்று இருப்பதாக தவறாக தெரிவிக்கலாம். ஆரம்பகால கண்டறிதலுக்கான பிற மருத்துவ முறைகள், குறைக்கப்பட்ட உணர்திறன் மற்றும் நீடித்த செயலாக்க நேரங்களால் வரையறுக்கப்படுகின்றன. தற்போதைய நியூக்ளிக் அமில அடிப்படையிலான நோயறிதல் பொதுவான டி.என்.ஏ உணர்திறன் ஆய்வுகளின் பயன்பாடு காரணமாக நோய்த்தொற்று இருக்கிறது என தவறாக காட்டும் ஆபத்துக்கு ஆளாகின்றன. எனவே, நோய்க்கிருமி மரபணுவில் அசாதாரண ஜிக்யு கட்டமைப்புகள் போன்ற தனித்துவமான நியூக்ளிக் அமில கட்டமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் மூலக்கூறு ஆய்வுகளின் வளர்ச்சி, துல்லியமான நோயறிதல் மதிப்பீடுகளின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்குகிறது.
ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தைச் (ஜே.என்.சி.ஏ.எஸ்.ஆர்) சேர்ந்த சுமன் பிரதிஹார், வசுதர் பட் எஸ்.வி, கிருதி கே.பகவத், திம்மையா கோவிந்தராஜு உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு ஒரு புதிய நோயறிதல் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
நோய் கண்டறிதலுக்கான முன்பே இருக்கும் கொள்கைகளை நம்பியிருக்கும் சமீபத்திய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட பிற நோயறிதல் மதிப்பீடுகளைப் போலல்லாமல், இந்த ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட குறிப்பிட்ட மற்றும் அசாதாரண நியூக்ளிக் அமில-சிறிய மூலக்கூறு தொடர்புகளின் அடிப்படையில் முற்றிலும் புதுமையான கண்டறியும் தளத்தை இது அறிமுகப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2075042
****
TS/SMB/KPG/DL
(Release ID: 2075189)
Visitor Counter : 36