மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
உலக மீன்வள தின கொண்டாட்டத்தை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
20 NOV 2024 11:16AM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை நாளை உலக மீன்வள தினத்தைக் கொண்டாட உள்ளது. மீன்வளத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரின் பங்களிப்பை அங்கீகரிக்கவும், உலகெங்கிலும் உள்ள அனைத்து பங்குதாரர்களுடனும் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், மீன்வளத்துறை 2014 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 21 ஆம் தேதியை உலக மீன்வள தினமாக கொண்டாடத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு உலக மீன்வள தினத்தின், கருப்பொருள் இந்தியாவின் நீலப் பொருளாதாரம்: சிறிய அளவிலான மற்றும் நிலையான மீன்வளத்தை வலுப்படுத்துதல் என்பதாகும். இந்த நிகழ்ச்சி நவம்பர் 21, 2024 அன்று புதுதில்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மற்றும் இணை அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெறும். மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த மாபெரும் நிகழ்வில் மூத்த அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், சர்வதேச பிரதிநிதிகள், கடல் தொழில்சார் சமூகத்தினர் ,கடல்தொழில் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
உலக மீன்வள தினம் 2024-ல் நிலையான மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமுக்கிய முயற்சிகள் தொடங்கி வைக்கப்படும்.தரவு உந்துதல் கொள்கைவகுப்பதற்கான 5 வது கடல் மீன்வள கணக்கெடுப்பைத்தொடங்குதல், நிலையான சுறா மேலாண்மை குறித்த தேசிய செயல் திட்டத்தை தொடங்குதல் மற்றும் சட்டவிரோத, ஒழுங்குபடுத்தப்படாத மற்றும் அறிவிக்கப்படாத மீன்பிடித்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074882
***
TS/PKV/RR/KR
(Release ID: 2074995)
Visitor Counter : 10