பாதுகாப்பு அமைச்சகம்
பன்னோக்கு பேரிடர் நிவாரணப் பயிற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக நிறைவு செய்தது
Posted On:
19 NOV 2024 5:01PM by PIB Chennai
இந்திய ராணுவம் 2024 நவம்பர் 18-19 தேதிகளில் அகமதாபாத் மற்றும் போர்பந்தரில் பலதரப்பு வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சியான 'சன்யுக்த் விமோச்சன் 2024'-ஐ வெற்றிகரமாக நடத்தியது. ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இந்தச் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டார். இது பேரிடர்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் தயார்நிலையை வெளிப்படுத்தியது.
இந்திய ராணுவத்தின் தென் மண்டல கொனார்க் கார்ப்ஸ் நடத்திய இந்தப் பயிற்சி, நவம்பர் 18 முதல் 19 வரை குஜராத்தின் அகமதாபாத் மற்றும் போர்பந்தரில் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. 18-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற பயிற்சியின் தொடக்க நிகழ்வில், 'குஜராத்தின் கடலோரப் பகுதியில் சூறாவளி' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட டேபிள் டாப் பயிற்சி இடம்பெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ), குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ஜி.எஸ்.டி.எம்.ஏ), வானிலை ஆய்வுத் துறை மற்றும் எஃப்.ஐ.சி.சி.ஐ ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்திய ஆயுதப்படை அதிகாரிகளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இரண்டாவது நாளாக 19-ந் தேதி போர்பந்தரில் உள்ள சௌபட்டி கடற்கரையில் பன்னோக்கு முகமை திறன் செயல்விளக்கம் நடைபெற்றது.
பன்னோக்கு முகமைகளின் திறன் செயல்விளக்கத்தில், பல்வேறு முகமைகள் ஒருங்கிணைந்த, பயனுள்ள பேரிடர் மேலாண்மை உத்திகளை நடைமுறைப்படுத்தின. இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்வதில் இந்திய ராணுவம், இந்தியக் கடற்படை, இந்திய விமானப்படை, இந்தியக் கடலோரக் காவல்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற மத்திய, மாநில முகமைகளின் கூட்டு முயற்சிகளை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2074664
***
TS/PKV/RR/DL
(Release ID: 2074760)
Visitor Counter : 21