சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதிப்பே இல்லாத நிலை: இந்தியாவின் போலியோ ஒழிப்பு வரலாறு

Posted On: 19 NOV 2024 4:22PM by PIB Chennai

2014-ம் ஆண்டில் போலியோ பாதிப்பே இல்லாத நிலையை இந்தியா அடைந்திருந்தது உலகளாவிய பொது சுகாதாரத்தில் மிக முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும். போலியோ ஒழிப்பு என்பது ஒரு தனி நிகழ்வு அல்ல, ஆனால் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியில் (ஜிபிஇஐ) இந்தியாவின் பங்கேற்புடன் தொடங்கி, உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் வலுவான தேசிய நோய்த்தடுப்பு முயற்சிகளால் பூர்த்தி செய்யப்பட்ட பல தசாப்த கால அர்ப்பணிப்பு முயற்சிகளின் உச்சமாகும்.

புதிய தடுப்பூசிகளின் உத்திசார்ந்த ஒருங்கிணைப்பு, புதுமையான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசு தலைமையிலான நோய்த்தடுப்பு பிரச்சாரங்கள், இந்தியாவை போலியோ இல்லாத நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தன. யுனிசெப், உலக சுகாதார அமைப்பு (WHO), பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, ரோட்டரி இன்டர்நேஷனல், நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) உள்ளிட்ட முக்கிய உலகளாவிய அமைப்புகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்ட அயராத முயற்சிகளால் இந்த சாதனை சாத்தியமானது. அவர்கள் ஒன்றாக, வளங்களைத் திரட்டினர், தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கினர், மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் போலியோவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து பரவலான பொது விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்தியாவில் தடுப்பு மருந்து போடுதல்

இந்தியாவின் நோய்த்தடுப்பு மருந்து போடும் முயற்சிகள் 1978-ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டன. அப்போது நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் (ஈபிஐ) தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பல்வேறு நோய்களுக்கு எதிராக, குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1985-ம் ஆண்டில், இந்தத் திட்டம் அனைவரும் தடுப்பூசி திட்டம் (UIP) என மறுபெயரிடப்பட்டது. இது நகர்ப்புற மையங்களைத் தாண்டி கிராமப்புறங்களுக்கும் அதன் வரம்பை விரிவுபடுத்தியது. காலப்போக்கில், கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 2005 இல் தொடங்கப்பட்ட தேசிய கிராமப்புற சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்) உட்பட பல தேசிய சுகாதார முயற்சிகளின் ஒருங்கிணைந்த பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் மாறியது.

இன்று, அனைவருக்கும் தடுப்பூசி திட்டம் என்பது உலகின் மிகப்பெரிய பொது சுகாதார திட்டங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் 2.67 கோடி புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களை இலக்காகக் கொண்டு, 12 தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளால் தடுக்கக்கூடிய நோய்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்குகிறது. போலியோ இந்த தடுப்பூசி திட்டத்தின்கீழ் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட முதல் நோய்களில் ஒன்றாகும்.மேலும் போலியோவை இல்லாமல் ஆக்குவது ஒரு முக்கிய பொது சுகாதார மைல்கல்லாக மாறியது.

***


TS/MM/AG/DL


(Release ID: 2074703) Visitor Counter : 16


Read this release in: English , Hindi , Manipuri