ஊரக வளர்ச்சி அமைச்சகம்
43-வது இந்திய சரஸ் வாழ்வாதார கண்காட்சியை மத்திய இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி புதுதில்லியில் இன்று திறந்து வைத்தார்
Posted On:
18 NOV 2024 4:52PM by PIB Chennai
புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் போது சரஸ் வாழ்வாதார கண்காட்சியை மத்திய ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி இன்று திறந்து வைத்தார். பின்னர் அங்கிருந்த அனைத்து அரங்குகளையும் பார்வையிட்ட இணை அமைச்சர், அனைத்து சுய உதவிக் குழுக்களுடனும் கலந்துரையாடியதுடன், பல்வேறு வகையான தயாரிப்புகளையும் பார்வையிட்டார். பொதுவாக நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் ஆகாயத்தாமரை போன்ற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் புதுமையான தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள படைப்பாற்றலை அவர் பாராட்டினார். இந்த கண்காட்சியை சர்வதேச தரத்தில் செயல்படுத்தியதற்காக அமைப்பாளர்களை இணை அமைச்சர் பாராட்டினார். இந்த கண்காட்சி எவ்வாறு மகளிர் சுய உதவிக் குழுவினரின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்பதையும், கிராமப்புற பெண்களுக்கு உண்மையான அதிகாரம் அளிக்க வழி வகுத்துள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இதுவரை, நம்மிடம் ஒரு கோடி லட்சாதிபதி மகளிர் உள்ளனர் என்றும், மேலும் குறைந்தது மூன்று கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார்" என்றும் இணை அமைச்சர் கூறினார். இந்த இலக்கை நம்மால் எட்ட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இந்த கண்காட்சி, 'பாரம்பரியம், கலை, கைவினை மற்றும் கலாச்சாரம்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கண்காட்சியின் 5 மண்டலங்களில் சுமார் 150 அரங்குகள் மூலம் 300-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் மகளிர் பங்கேற்று தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு, தனித்துவமான பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கிராமப்புற பல்வேறு வாழ்வாதார தயாரிப்புகளான ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் பட்டுசேலை, பருத்தி, ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த டசார் சேலை; மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேரி சேலை; ஆந்திரா, அசாமின் மர கைவினைப்பொருட்கள்; இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டின் கம்பளி பொருட்கள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்கள், அசாம், ஜார்க்கண்ட், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மூங்கில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074284
****
TS/IR/RS/DL
(Release ID: 2074351)
Visitor Counter : 12