பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஆக்ராவில் நவம்பர் 19 அன்று பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் சார்பில் வாழ்க்கையை எளிதாக்குதல் தொடர்பான மாநாடு- மத்திய இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் தலைமை வகிக்கிறார்
Posted On:
17 NOV 2024 12:32PM by PIB Chennai
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தனது இரண்டாவது பஞ்சாயத்து மாநாட்டை உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில், 2024 நவம்பர் 19 அன்று நடத்த உள்ளது. நான்கு பஞ்சாயத்து மாநாடுகளின் தொடரில் இது இரண்டாவது பஞ்சாயத்து மாநாடு ஆகும், முதலாவது மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த முன்முயற்சி நாடு முழுவதும் கிராமப்புறங்களில் அடிமட்ட நிர்வாகம் மற்றும் சேவை வழங்கல் வழிமுறைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் "எளிதான வாழ்க்கை தொடர்பான பஞ்சாயத்து மாநாடு: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார். இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேச பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ஓம் பிரகாஷ் ராஜ்பர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், உத்தரப்பிரதேச அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு நரேந்திர பூஷன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அலோக் பிரேம் நகர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
அசாம், அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, நாகாலாந்து, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்த பஞ்சாயத்து மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
அடிமட்ட சேவை வழங்கலின் முதுகெலும்பாக விளங்கும் பஞ்சாயத்து அலுவலர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கடைசி மைல் சேவை வழங்கலை மேம்படுத்துதல் மற்றும் ஊரக நிர்வாகத்திற்கான தர அளவுகோல்களை நிறுவுதல் குறித்த விரிவான விவாதங்களில் பங்கேற்பார்கள். கிராமப்புற நிர்வாகத்தில் நல்ல மாற்றங்களை ஊக்குவிப்பதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹைதராபாத் பஞ்சாயத்து மாநாட்டின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, ஆக்ரா பஞ்சாயத்து மாநாட்டு நிகழ்ச்சிகள், பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு ஆகிய 11 மொழிகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் பாஷினி தளத்தைப் பயன்படுத்தி நேரடியாக ஒளிபரப்பப்படும்.
***
PLM/DL
(Release ID: 2074055)
Visitor Counter : 25