சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஜர்பைஜானின் பாகுவில் உள்ள CoP29 இல் பருவநிலை நிதி மற்றும் தணிப்பு வேலைத் திட்டத்தில் ஈடுபட வளர்ந்த நாடுகள் விரும்பாதது குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது

Posted On: 17 NOV 2024 11:46AM by PIB Chennai

அஜர்பைஜானின் பாகுவில் நடைபெற்று வரும் CoP29 இல், 16.11.2024 அன்று, ‘ஷர்ம் எல்-ஷேக் தணிப்பு லட்சியம் மற்றும் செயல்படுத்தல் வேலைத் திட்டம் குறித்த துணை அமைப்புகளின் நிறைவுக் கூட்டத்தில் இந்தியா ஒரு அறிக்கையை வழங்கியது.

வளர்ந்த நாடுகளின் தலையீடுகளுக்கு பதிலளித்த இந்தியா, கடந்த காலத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டவற்றிலிருந்து வளர்ந்த நாடுகள் பின்வாங்குவது பற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஒருமித்த எண்ணம் கொண்ட வளரும் நாடுகள் , அரபு குழுமம் மற்றும் ஆப்பிரிக்க பேச்சுவார்த்தையாளர்களின் குழு ஆகியவற்றுடன் . இந்தியா தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியது.

இந்த வாரத்தில் CoP29 யில் வெளியிடப்பட்ட கருத்துகள்  குறித்து இந்தியா தீவிர கவலை தெரிவித்தது. வளர்ந்து வரும் நாடுகள் முக்கியமான விஷயங்களில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. உலகின் எங்கள் பகுதி பருவநிலை மாற்றத்தின் சில மோசமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. பருவநிலை அமைப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத இந்த நாடுகள் விலை கொடுக்க வேண்டியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COP27 இல் ஷர்ம் எல்-ஷேக் தணிப்பு லட்சியம் மற்றும் செயல்படுத்தும் பணித் திட்டம் மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தில் உள்ள உலகளாவிய சூழல் தொடர்பான கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் புறக்கணிக்கும் போக்கை நாங்கள் கவனிக்கிறோம். இது கவலையளிக்கிறது என அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2074011

 

***

PKV/DL


(Release ID: 2074054) Visitor Counter : 24


Read this release in: English , Urdu , Marathi , Hindi