மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மீன் வளத்துறையில் வாய்ப்புகள் குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நாளை நடைபெறுகிறது

Posted On: 13 NOV 2024 3:10PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, “அந்தமான் -நிக்கோபார் தீவுகளின் மீன்வளம், நீர்வாழ் உயிரினத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள் 2024” என்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை  நாளை (2024 நவம்பர் 14)  அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நடத்துகிறது. இதில் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இணையமைச்சர்கள் திரு ஜார்ஜ் குரியன் , திரு எஸ்.பி.சிங் பாகேல், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர், மீன்வளத்துறை செயலாளர், இதர பிரமுகர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். டுனா, கடற்பாசி தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 முதலீட்டாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

அந்தமான் - நிக்கோபார் தீவுகள் மீன்வள மேம்பாட்டிற்கு ஒரு முக்கிய வாய்ப்பை வழங்குகின்றன. அதிக கடல் வளங்கள், குறிப்பாக சூரை மற்றும் டுனா போன்ற உயர் மதிப்பு இனங்கள், இப்பகுதியில் உள்ளன. அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024, அறிவு பரிமாற்றம், மீன் வள கட்டமைப்பு, வணிக ஆய்வு ஆகியவற்றிற்கான ஒரு தளத்தை வழங்கும். இதில் மீன்வளத் துறையில் நிலையான வளர்ச்சிக்கான பொது-தனியார் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான அமர்வுகளும் இடம்பெறும்.

பின்னணி:

"சூரிய உதயத் துறை" என அங்கீகரிக்கப்பட்ட மீன்வளத் துறை, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்தியாக இருப்பதுடன், தேசிய வருமானம், ஏற்றுமதி, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2023-24-ம் ஆண்டில் இந்தியா ரூ.60,523.89 கோடி மதிப்புள்ள 17.81 லட்சம் டன் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 2013-14-ம் நிதியாண்டிலிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2024-25 ஆம் ஆண்டுக்குள் மீன்வள ஏற்றுமதியை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்த்த மீன்வளத்துறை திட்டமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072977

PLM/RS/RR

***


(Release ID: 2073006) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Hindi