பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பி-7 பாராசூட் முறையின் விவரங்களை தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் ஒப்படைத்தது
Posted On:
12 NOV 2024 6:55PM by PIB Chennai
பி-7 பாராசூட் அமைப்பின் சீல் வைக்கப்பட்ட விவரங்களை வைத்திருக்கும் அதிகாரம் ஆக்ராவில் உள்ள வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் தர உத்தரவாத தலைமை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைமை அலுவலகத்தில் 2024 நவம்பர் 11, 2024 அன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் இதனை ஒப்படைத்தார்.
வான்வழி விநியோக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தரமான மேம்படுத்தப்பட்ட P-7 பாராசூட்டை வடிவமைத்துள்ளது. கான்பூரில் உள்ள கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம் இதனை தயாரித்துள்ளது. ஐஎல்-76 விமானத்திலிருந்து 9.5 டன் வரையிலான எடையை நான்கு கி.மீ உயரத்திலிருந்து பாதுகாப்பாக இறக்கும் திறன் கொண்ட பாராசூட் அமைப்பை இது உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் இந்திய ராணுவம் தங்கள் இலகுரக ஃபீல்ட் துப்பாக்கி மற்றும் ஜீப்பை எல்லை மற்றும் போர் பகுதிகளில் வானிலிருந்து இறக்கி விரைவாக நிலைநிறுத்த முடியும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2072833
-----
IR/KPG/KV
(Release ID: 2072859)
Visitor Counter : 40