அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர்- தாதுக்கள்  & பொருட்கள் தொழில்நுட்ப கழகத்தில் (CSIR-IMMT)-ல் 2024 நவம்பர் 13 அன்று தொழில்நுட்ப மேம்பாட்டு மைய மாநாடு தொடக்க விழா

Posted On: 12 NOV 2024 5:05PM by PIB Chennai

 

நாட்டில் தொழில்துறை ஆராய்ச்சியைத் தூண்டுதல், புத்தாக்கத்திற்கு உகந்த சூழலை வளர்த்தல், புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை இயக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், பயன்படுத்துதல் மற்றும் பரிமாற்றம் செய்தல் ஆகியவை அறிவியல்- தொழில ஆராய்ச்சித் துறைக்கு (DSIR) அவசியமாக்கப்பட்டுள்ளன.

இந்த நோக்கத்திற்கு ஏற்ப, அறிவியல் தொழிலக ஆராய்ச்சித் துறை, "பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் (CRTDHs)" திட்டத்தை செயல்படுத்தி வருகிறது, இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEs) தொழில்துறை ஆராய்ச்சி & மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில், பொது நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆராய்ச்சி & மேம்பாடு உள்கட்டமைப்பை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தில் எம்எஸ்எம்இ-க்களின் முக்கியப் பங்கை அங்கீகரித்து, இந்தத் திட்டம் அறிவியல் முன்னேற்றங்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்காக, ஆராய்ச்சி & மேம்பாடு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

2014-15-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் திட்டம், நாடு முழுவதும் 18 பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களுக்கு வெற்றிகரமாக ஆதரவளித்து, இப்போது அதன் 10-வது ஆண்டை எட்டியுள்ளது. இந்த மையங்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளதுடன், பங்குதாரர்களிடையே எழுச்சியூட்டும் வெற்றிக் கதைகளை உருவாக்கியுள்ளன, "தற்சார்பு இந்தியா" என்ற பார்வையை முன்னெடுத்துச் செல்வதோடு, "உள்ளூர் பொருட்களுக்கான குரல்" இயக்கத்தின் வேகத்தை வலுப்படுத்துகின்றன. பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் திட்ட வலையமைப்பின் ஒரு பகுதியாக இல்லாதவர்கள் உட்பட, பரந்த அளவிலான பங்குதாரர்களுக்கு இந்த நீடித்த சாதனைகளை வெளிப்படுத்துவது அவசியம். இந்த உணர்வில், அறிவியல் தொழிலக ஆராய்ச்சித் துறை நவம்பர் 13-14 தேதிகளில் புவனேஸ்வரில் உள்ள சிஎஸ்ஐஆர்-தாதுக்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப கழகம், டிஎஸ்ஐஆர்- பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய மாநாடு 2024-க்கு ஏற்பாடு செய்துள்ளது. அங்கு அனைத்து 18 பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்ககளும் பங்கேற்று இரண்டு நாள் நிகழ்வில் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும். இந்த சந்திப்பு பரந்த அளவிலான பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்க்கும். குறைவாக பயன்படுத்தப்படும் வளங்களின் பரந்த திறனைத் திறக்கும். டி.எஸ்..ஆர் முன்பு மூன்று வெற்றிகரமான மாநாடுகளை நடத்தியுள்ளது: 2019-ல் ஹைதராபாத்தில் உள்ள சி.எஸ்..ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சி.சி.எம்.பி); CSIR-இந்திய நச்சுயியல் ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ 2022-ல்; மற்றும் 2023-ல் ஐஐடி காந்திநகர்.

டிஎஸ்ஐஆர்- பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மைய மாநாடு 2024 நவம்பர் 13, அன்று சிஎஸ்ஐஆர்-தாதுக்கள் மற்றும் பொருட்கள் தொழில்நுட்ப கழகம், புவனேஸ்வரின் இயக்குனர் டாக்டர் ராமானுஜ் நாராயணின் வரவேற்பு உரையுடன் தொடங்கும். தொடக்க விழாவிற்கு டி.எஸ்..ஆர் செயலாளரும், சி.எஸ்..ஆர் தலைமை இயக்குநருமான டாக்டர் என். கலைச்செல்வி தலைமை வகிப்பார். அவர் தொடக்க உரையாற்றுவார். இந்த மாநாட்டில் டாக்டர் விபின் சி.சுக்லா, விஞ்ஞானி ஜி & தலைவர்-சி.ஆர்.டி.டி.எச், டி.எஸ்..ஆர், திரு ஹேமந்த் சர்மா, ..., ஒடிசா அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனத் துறையின் முதன்மைச் செயலாளர், ஒடிசா அரசின் கைவினைப் பொருட்கள் இயக்குநர் திருமதி பிரணதி சோத்ரே, ..., மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் திரு. பி.கே. குப்தா ஆகியோர் உரையாற்றுவார்கள்.

பல்வேறு பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களால் உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் முன்மாதிரிகள், இந்த மையங்களில் பேணிக் காக்கப்பட்ட எம்எஸ்எம்இ-க்கள் மற்றும் புத்தொழில்களுடன் காட்சிப்படுத்தும் கண்காட்சியின் தொடக்கமும் இந்த நிகழ்ச்சியில் அடங்கும். சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவதுடன், சி.ஆர்.டி.டி.எச்.களின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை இந்த கண்காட்சி எடுத்துரைக்கும். பல்வேறு பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களின் சாதனைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பங்கேற்பாளர்களுக்கு இந்த கண்காட்சி ஒரு வாய்ப்பை வழங்குவதுடன், எம்எஸ்எம்இ-க்கள் / புத்தொழில்களுக்கு அவர்கள் தற்போது தொடர்பு கொள்ளாத பிற பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.

இரண்டு நாள் நிகழ்வின் போது, மொத்தம் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்படும், இதில் பல்வேறு பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்களின் சவால்கள், கற்றல் மற்றும் வெற்றிக் கதைகள் குறித்த விரிவான விவாதம் டம்பெறும். ஒவ்வொரு அமர்விலும் தலைசிறந்த வல்லுநர் ஒருவரின் முக்கிய உரை இடம்பெறும். மேலும், பொது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையங்கள் மற்றும் எம்எஸ்எம்இ-க்கள் இணைந்து, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதும் தொடரும். பல்வேறு பங்குதாரர்களுக்கான செயல்பாடுகளை உருவாக்குவதுடன் இந்த மாநாடு தொடரும். டாக்டர் சுமன் மஜும்தார், விஞ்ஞானி-, டி.எஸ்..ஆர் மற்றும் மாநாட்டுஒருங்கிணைப்பாளர், நன்றியுரை வழங்குவார்.

இந்த நிகழ்ச்சியில் டி.எஸ்..ஆர் அதிகாரி டாக்டர் ரஞ்சித் பைர்வா, விஞ்ஞானி மற்றும் உறுப்பினர் செயலாளர் - சி.ஆர்.டி.டி.எச் மற்றும் டாக்டர் யதேந்திர எஸ்.சவுத்ரி, சி.ஆர்.டி.டி.எச், சி.எஸ்..ஆர்-..எம்.டி, புவனேஸ்வரின் மூத்த முதன்மை விஞ்ஞானி, மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.) மற்றும் ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில்துறை சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் சி.ஆர்.டி.டி.எச் இன் நன்மைகளை ஆராய உள்ளனர்.

***


MM/RR/KV

 


(Release ID: 2072784) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi