பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உயிரி எரிபொருள் கலப்பு மூலம் நாடு இறக்குமதி செலவில் 91,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தியது

Posted On: 12 NOV 2024 5:00PM by PIB Chennai

 

உயிரி எரிபொருள் கலப்பின் மூலம், இறக்குமதிக்கான செலவில் நாடு 91,000 கோடி ரூபாயை சேமிக்க  முடியும் என்றும், இந்தப் பணத்தை விவசாயத் துறையின் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று 27-வது எரிசக்தி தொழில்நுட்ப உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், உயிரி எரிபொருள் கலப்பில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்றார். அடுத்த ஆண்டுக்குள்  20 சதவீத உயிரி எரிபொருள் கலவை என்ற இலக்கை இந்தியா எட்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நமது சுத்திகரிப்பு நிலையங்கள் பசுமை எரிசக்தியை பின்பற்றும்போது, பசுமை  ஹைட்ரஜனை நோக்கிய இலக்கில் நாடு வெற்றி பெறும் என்று அமைச்சர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிசக்தித் தேவை இரண்டரை மடங்கு அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார். இந்தியாவின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு திறன் ஆண்டுக்கு 400 முதல் 450 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது. இது உலக சராசரியில் மூன்றில் ஒரு பங்கு என்று அவர் கூறினார்.

2070-ம் ஆண்டுக்குள் நிகர கார்பன் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதற்கான முயற்சிகளை நாடு இரட்டிப்பாக்க வேண்டும் என்று அவர் கூறினார். எரிசக்தித் துறையில் இலக்குகளை எட்டுவதற்கு எரிசக்தி பாதுகாப்பு, நிலைத்தன்மை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆகியவை கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார். உயர் தொழில்நுட்ப மையம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மூன்று நாள் எரிசக்தி தொழில்நுட்ப கூட்டத்தில் 1200 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

23 கண்காட்சியாளர்கள் தங்கள் சமீபத்திய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துவார்கள். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நிறுவப்பட்ட, 2023-24-ம் ஆண்டிற்கான  சிறந்த எரிசக்தி திறன்மிக்க தொழில்நுட்ப விருதுகளை அமைச்சர் வழங்கினார்.

***

PKV/AG/KV

 


(Release ID: 2072779) Visitor Counter : 34


Read this release in: English , Urdu , Marathi , Hindi