பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிதித் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பெருந்தாக்கம் குறித்த பயிலரங்கு நடைபெற்றது

Posted On: 12 NOV 2024 11:51AM by PIB Chennai

முதலீட்டாளர் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமம் மும்பை பங்குச் சந்தை ஆகியவற்றுடன் இணைந்து நிதிக் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல்: முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் மூலதனச் சந்தை மேம்பாட்டிற்கான நவீன அணுகுமுறை என்ற தலைப்பில் ஒரு பயிலரங்கு நடைபெற்றது. இது 2024 நவம்பர் 11, அன்று மும்பையில் உள்ள மும்பை பங்குச் சந்தையின் சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் மாறக்கூடிய பங்களிப்பை ஆராய வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிலரங்கு, நிதிக் கல்வியறிவை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல் மற்றும் மூலதனச் சந்தைகளில் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. நிதி சூழல் அமைப்பு தொடர்ந்து உருவாகி வருவதால், டிஜிட்டல் கருவிகள், தளங்களுடன் தொடர்புடைய வாய்ப்புகள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முக்கியமானதாகும். அதே நேரத்தில் இந்தியாவின் மூலதனச் சந்தைகளின் நீண்டகால வளர்ச்சியை ஆதரிக்கிறது.

முதலீட்டாளர் கல்வி, பாதுகாப்பு நிதி ஆணையம் நிறுவப்பட்டதிலிருந்து, நிதி அறிவு, விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சிகள் முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதிலும், தகவலறிந்த நிதி முடிவுகளை எடுப்பதற்கான முயற்சிகளுடன் அவர்களை தயார் படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

---

(Release ID 2072636)

IR/KPG/KR

 


(Release ID: 2072662) Visitor Counter : 22


Read this release in: English , Gujarati , Urdu , Hindi