பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் குறித்த தொடர் உத்வேகம்; கேரளா மற்றும் மேகாலயாவுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிப்பு
प्रविष्टि तिथि:
12 NOV 2024 9:10AM by PIB Chennai
2024-25 ஆம் நிதியாண்டில் கேரள மாநிலத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு இரண்டாவது தவணையாக ரூ.266.80 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியமாக வழங்கியுள்ளது. இந்த நிதி மாநிலத்தில் உள்ள தகுதி வாய்ந்த 14 மாவட்ட ஊராட்சிகள், 152 வட்டார ஊராட்சிகள் மற்றும் 941 கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும். மேகாலயாவில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2021-22 நிதியாண்டின் முதல் தவணை நிபந்தனையற்ற மானியமாக ரூ.27.00 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் (குடிநீர் மற்றும் துப்புரவு துறை) மூலமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியங்களை மாநிலங்களுக்கு விடுவிக்க மத்திய அரசு பரிந்துரைக்கிறது. பின்னர் அவை நிதி அமைச்சகத்தால் விடுவிக்கப்படுகின்றன. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானியங்கள் பரிந்துரைக்கப்பட்டு ஒரு நிதியாண்டில் 2 தவணைகளில் விடுவிக்கப்படுகின்றன.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிபந்தனையற்ற மானியங்கள், சம்பளம் மற்றும் பிற நிறுவன செலவுகள் தொடர்பான செலவுகள் நீங்கலாக, அரசியலமைப்பின் பதினோராவது அட்டவணையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள 29 உட்பொருட்களில் இடம் சார்ந்த தேவைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், (அ) துப்புரவு முயற்சிகள் மற்றும் திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத நிலையை பராமரித்தல், வீட்டுக் கழிவு மேலாண்மை, மனிதக் கழிவு சுத்திகரிப்பு மற்றும் மலக் கசடு மேலாண்மை மற்றும் (ஆ) மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி முயற்சிகளுடன் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை ஆதரிப்பதற்காக பிணைக்கப்பட்ட மானியங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
பதினைந்தாவது நிதிக்குழு மானியங்கள் வாயிலாக பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு ஊரக உள்ளாட்சி அமைப்புகளை தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது. இந்த நிதிகள் இதுபோன்ற அமைப்புகளை அதிக திறன், பொறுப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை கொண்டவையாக மாற்றுவதில் கருவியாக உள்ளன, இதன் மூலம் கிராமப்புறங்களில் நிலையான வளர்ச்சியை இயக்குகின்றன. பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இந்த முயற்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது. இது நாட்டின் வளர்ச்சி கட்டமைப்பிற்குள் அத்தியாவசிய தூண்களாக பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் / ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, வளர்ந்த பாரத்தின் இலக்கை எட்ட உறுதுணையாக உள்ளது.
***
(Release ID: 2072591)
BR/KR
(रिलीज़ आईडी: 2072612)
आगंतुक पटल : 102