நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை சிறப்பு இயக்கம் 4.0-ன் போது அடைந்த முன்னேற்றம்
Posted On:
08 NOV 2024 6:30PM by PIB Chennai
நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை அதன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் உட்பட, 2024அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கங்களைப் போலவே, தூய்மையை நிறுவன மயமாக்குவதற்கும் நிலுவையில் உள்ள குறிப்புகளை தீர்ப்பதற்கும் சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
ஆயத்த கட்டத்தில், இடங்களை தூய்மைப்படுத்துதல், இட மேலாண்மை மற்றும் அலுவலகங்களை அழகுபடுத்துதல், ஸ்கிராப் மற்றும் தேவையற்ற பொருட்களை அடையாளம் காணுதல் மற்றும் அவற்றை அகற்றும் நடைமுறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிலுவையில் உள்ள குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள் (அமைச்சரவை குறிப்புகள்), பிரதமர் அலுவலக குறிப்புகள், 3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உத்தரவாதங்கள் போன்ற நடவடிக்கைகளுக்கான இலக்குகளை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் குறைகள் மற்றும் மேல்முறையீடுகள், கோப்புகளை மறுஆய்வு செய்தல் / கோப்புகளை பதிவு செய்தல் மற்றும் களையெடுத்தல் / மின்-கோப்புகளை முடித்து வைத்தல் ஆகியவை இந்த இயக்கத்தில் மேற்கொள்ளப்பட்டன.
அதன்பிறகு, 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை பிரச்சாரத்தின் அமலாக்க கட்டத்தில், அடையாளம் காணப்பட்ட இலக்குகளை அகற்றுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை துறை மேற்கொண்டது. 07.11.2024 நிலவரப்படி பல்வேறு வகைகளின் கீழ் அகற்றலின் நிலை பின்வருமாறு:
- 224 பொதுமக்கள் குறை தீர்க்கப்பட்டது;
- 53 பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள் தள்ளுபடி;
- களையெடுப்பதற்காக அடையாளம் காணப்பட்ட 345 கோப்புகளில் இருந்து 332 நேரடி கோப்புகள் முடித்துவைக்கப்பட்டன;
- 288 மின் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன, அவற்றில் 26 மின் கோப்புகள் மூடப்பட்டன;
- நடத்தப்பட்ட தூய்மை முகாம்கள் – 4;
- மொத்த இடம் விடுவிக்கப்பட்டது - 99,500 சதுர அடி;
- ஸ்கிராப் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் - ரூ.3,83,006/-
***
PKV/AG/DL
(Release ID: 2071863)
Visitor Counter : 21