பாதுகாப்பு அமைச்சகம்
முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் 2-வது பதிப்பை தொடங்கி வைத்தார்
Posted On:
08 NOV 2024 6:21PM by PIB Chennai
சவுகான் புதுதில்லியில் இன்று, வருடாந்திர இந்திய ராணுவ பாரம்பரிய விழாவின் (ஐ.எம்.எச்.எஃப்) 2-வது பதிப்பை முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தொடங்கி வைத்தார். 2024 நவம்பர் 08-09 நடைபெறும் இரண்டு நாள் திருவிழாவில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, ராணுவ வரலாறு மற்றும் ராணுவ பாரம்பரியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் உலகளாவிய மற்றும் இந்திய சிந்தனைக் குழாம்கள், நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கல்வி மற்றும் சுற்றுலா மூலம், இந்தியாவின் ராணுவ பாரம்பரியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராணுவ விவகாரங்கள் துறை மற்றும் யு.எஸ்.ஐ ஆகியவற்றின் முன்முயற்சியான 'ஷௌர்யா கதா' திட்டத்தையும் சி.டி.எஸ் அறிமுகப்படுத்தினார்.
ஏர் மார்ஷல் விக்ரம் சிங் (ஓய்வு) எழுதிய இந்தோ-பாகிஸ்தான் விமானப் போரின் வரலாறு டிசம்பர் 1971 உள்ளிட்ட ராணுவ தலைப்புகளில் முக்கிய வெளியீடுகளையும் ஜெனரல் சவுகான் வெளியிட்டார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) பாதுகாப்பு ஆராய்ச்சியில் புதுமைகள் மூலம் தற்சார்பு இந்தியாவுக்கு பங்களிப்பதில், அதன் பயணம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. டெல்லி என்.சி.ஆர் பகுதி முழுவதிலுமிருந்து வந்திருந்த என்.சி.சி கேடட்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு கிடைக்கும் பல்வேறு வாய்ப்புகள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் மூன்று சேவைகளின் தகவல் அரங்குகள் அமைக்கப்பட்டன.
இந்தியாவின் நீண்ட மற்றும் வளமான ராணுவ வரலாறு மற்றும் பாதுகாப்பு கலாச்சாரம் இருந்தபோதிலும், நாட்டின் ராணுவ பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு கவலைகளின் பல்வேறு அம்சங்களைப் பற்றி, பொது மக்களில் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை. இந்திய ராணுவ பாரம்பரிய விழா, தேசிய சொற்பொழிவு மற்றும் நாட்டின் கலாச்சார நாட்காட்டியில் உள்ள இந்த இடைவெளியை நிரப்ப முயல்கிறது. இந்தியாவின் ராணுவ மரபுகள், சமகால பாதுகாப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகள் மூலம், ராணுவ திறனில் தன்னம்பிக்கையை அடைவதற்கான முயற்சிகள் பற்றிய புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
----
MM/KPG/DL
(Release ID: 2071858)
Visitor Counter : 38