நிதி அமைச்சகம்
சேமிப்பு சரக்குகளின் காப்பீட்டிற்கான நாட்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலமும், ஏஇஓ-இணக்கமான சிசிஎஸ்பிகள் உரிமம் புதுப்பித்தல் செயல்முறையை திரும்பப் பெறுவதன் மூலமும், சுங்க சரக்கு சேவை வழங்குநர்களுக்கு (சிசிஎஸ்பி) தளர்வுகளை சிபிஐசி அறிமுகப்படுத்துகிறது
Posted On:
08 NOV 2024 6:10PM by PIB Chennai
தளவாட உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், செயல்திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவற்றின் பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்ப, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) சுங்க சரக்கு சேவை வழங்குநர்களுக்கு (சிசிஎஸ்பி) முக்கிய தளர்வுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
2024 நவம்பர் 7, தேதியிட்ட அறிவிப்பு எண்.75/2024-சுங்கம் (N.T.) மற்றும் 2024 நவம்பர் 8 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 22/2024-சுங்கத்தின் கீழ் வழங்கப்பட்ட முக்கிய தளர்வுகள்:
சேமிப்பு சரக்குகளை காப்பீடு செய்வதற்கான நாட்களின் எண்ணிக்கை தளர்த்தப்பட்டது. சுங்கப் பகுதிகளில் சரக்குகளைக் கையாளுதல் விதிமுறைகள், 2009-ன்படி, சுங்கப் பகுதிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சரக்குகளை 10 நாட்களுக்கு சுங்க சரக்கு சேவை வழங்குநர்கள் (CCSPs) காப்பீடு செய்ய வேண்டும். வர்த்தக வசதி நடவடிக்கையாக, இதை 5 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செலவைக் குறைப்பதன் மூலம் நிறுவனங்களுக்கான பணப்புழக்கத்தை இது அதிகரிக்கும்.
உரிமம் புதுப்பித்தல் செயல்முறை திரும்பப் பெறப்பட்டது:நன்கு நிறுவப்பட்ட மற்றும் இணக்கமான வணிக நிறுவனங்களை அங்கீகரிக்கும் நடவடிக்கையில், சர்வதேச செயல்பாட்டு தரநிலைகளை (AEO) பூர்த்தி செய்யும் சுங்க சரக்கு சேவை வழங்குநர்கள் (CCSPs), இனி சுங்கப் பகுதிகளில் சரக்குகளைக் கையாளுதல் விதிமுறைகள், 2009-ன் கீழ் சரக்குகளைக் கையாள்வதற்கான உரிமங்களின் புதுப்பித்தல் செயல்முறைக்கு உட்படுத்தத் தேவையில்லை. அவர்களின் உரிமங்கள் அவர்களின் ஏ.இ.ஓ அங்கீகாரத்துடன் ஒத்திசைவாக செய்யப்பட்டுள்ளன. சி.சி.எஸ்.பி.க்களாக பணிபுரியும் சரக்கு போக்குவரத்து ஆபரேட்டர்களுக்கு வர்த்தகம் செய்வதை இது எளிதாக்கும்.
இந்த நடவடிக்கைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்களைக் கையாள்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் CCSP-க்களுக்கான செயல்பாட்டு செலவுகள் மற்றும் இணக்க சுமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த மாற்றங்கள், செலவு மற்றும் இணக்க சுமையைக் குறைப்பதற்கும், ஏற்றுமதி-இறக்குமதி செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
சிபிஐசி-யின் முயற்சிகள், தளவாட செலவுகளைக் குறைப்பதுடன், செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதோடு உலகளாவிய வர்த்தகத்தில் போட்டி வீரராக இந்தியாவின் நிலையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
****
MM/KPG/DL
(Release ID: 2071847)
Visitor Counter : 36