பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியக் கடற்படையின், திங்க் 2024 வினாடி வினாவின் அரையிறுதிப் போட்டிகள் நிறைவு
Posted On:
07 NOV 2024 10:03PM by PIB Chennai
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியக் கடற்படையின் வினாடி-வினாவான திங்க் 2024 இன் அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 07, 2024 அன்று கேரளாவின் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படை அகாடமியில் முடிவடைந்தது. கடுமையான போட்டிக்குப் பிறகு, எட்டு அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. தெற்கு கடற்படைக் கட்டளையின் (கமாண்ட்) கீழ் நடத்தப்பட்ட அரையிறுதிப் போட்டிகள், 'வளர்ந்த பாரதம்' என்ற கருப்பொருளுடன் சீரமைக்கப்பட்ட பல தலைப்புகளில் மாறுபட்ட கேள்விகளைக் கையாளும் மாணவர்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்தின.
இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற எட்டு அணிகள்:-
(அ) டாக்டர் வீரேந்திர ஸ்வரூப் கல்வி மையம், அவத்புரி (உத்தரப் பிரதேசம்)
(ஆ) எக்செல் பப்ளிக் பள்ளி, மைசூரு (கர்நாடகா)
(இ) முஷ்டிஃபண்ட் ஆர்யன் மேல்நிலைப் பள்ளி (கோவா)
(ஈ) சேத் எம்.ஆர். ஜெய்பூரியா பள்ளி, கோயல் வளாகம், லக்னோ (உத்தரப் பிரதேசம்)
(எ) தில்லி பப்ளிக் பள்ளி, கிரேட்டர் நொய்டா (உத்தரப் பிரதேசம்)
(ஏ) கேம்பிரிட்ஜ் கோர்ட் உயர்நிலைப் பள்ளி (ராஜஸ்தான்)
(ஐ) பி.வி.பவன்’ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம், சென்னை (தமிழ்நாடு)
(ஒ) ஜெய்ஸ்ரீ பெரிவால் உயர்நிலைப் பள்ளி (ராஜஸ்தான்)
நவம்பர் 08, 2024 அன்று இந்தியக் கடற்படை அகாடமியில் இறுதிப் போட்டிகள் நடைபெறும், தேர்ச்சிபெற்ற அணிகள், திங்க் 2024 சாம்பியன்ஸ் என்ற மதிப்புமிக்க பட்டத்திற்காகப் போட்டியிடும். 12,600 க்கும் மேற்பட்ட பங்கேற்பு குழுக்களுடன் தொடங்கிய திங்க் 2024, நாடு முழுவதும் உள்ள 3800 நகரங்களில் பரவி, தேசத்தின் பெருமை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி இலக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். பங்கேற்பாளர்கள், இந்தியக் கடற்படை அகாடமியில் உள்ள நவீன வசதிகளை பார்வையிட்டனர். கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, திங்க் 24 இறுதிப் போட்டிக்குத் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்வார்.
***
(Release ID: 2071645)
BR/KR
(Release ID: 2071678)
Visitor Counter : 30