நிதி அமைச்சகம்
2024 அக்டோபர் 2 முதல் 31 வரையிலான சிறப்பு இயக்கம் 4.0-ன் போது வருவாய்த் துறை 100% இலக்கை அடைந்தது
Posted On:
06 NOV 2024 4:56PM by PIB Chennai
வருவாய்த் துறை அதன் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை 'செயல்படுத்தும் கட்டத்தில்' விஐபி குறிப்புகள், பொதுமக்கள் குறைகள், மதிப்பாய்வு மற்றும் கோப்புகளை அகற்றுவது போன்ற அனைத்து முக்கியப் பணிகளிலும் இலக்குகளை அடைய வருவாய்த் துறை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
அனைத்து அதிகாரிகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு, இயக்கத்தின் போது 100% இலக்குகளை அடைவதை உறுதி செய்தனர். பணியிடத்திலும் சுற்றுப்புறத்திலும், தூய்மையை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது.
30.10.2024 வரை, இந்த இயக்கத்தின் கீழ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது-
1003 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அத்தனை குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டன.
15 மிக முக்கிய பிரமுகர் குறிப்புகளில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டன.
315 மின்னணு கோப்புகளில் அனைத்தும் மறுபரிசீலனைக்குப் பிறகு நிறைவு செய்யப்பட்டது.
மதிப்பாய்வு செய்த பின்னர் 1,646 நேரடி கோப்புகள் (100%) கழிக்கப்பட்டன.
பழைய பழுதடைந்த மரச்சாமான்கள், சாதனங்கள், பிற பழைய பொருட்கள், மின்னணு பொருட்கள் அகற்றப்பட்டு அலுவலக இடம் காலியாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் துறைக்கு ரூ.1,89,100- வருவாய் கிடைத்துள்ளது.
தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின் கீழ், வருவாய்த்துறை மற்றும் அதனுடன் இணைந்த அலுவலகங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
----
TS/IR/KPG/DL
(Release ID: 2071294)
Visitor Counter : 21