தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தொழிலாளர் அமைப்பு நிர்வாகக் குழுவின் 352-வது அமர்வில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பில் இந்தியாவின் நேர்மறையான அனுபவம் எடுத்துரைக்கப்பட்டது

Posted On: 02 NOV 2024 11:33AM by PIB Chennai

 

 சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) 352-வது நிர்வாக  குழு கூட்டம் 2024 அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை ஜெனீவாவில் (சுவிட்சர்லாந்து) நடைபெறுகிறது. முதல் வாரத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தவ்ரா இந்தியக் குழுவுக்கு தலைமை தாங்குகிறார். இன்றைய விவாதங்களின் போது, தரமான வேலைகளை உருவாக்குதல், சமூகப் பாதுகாப்பை ஆதரித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியத்துவத்தை திருமதி தவ்ரா எடுத்துரைத்தார். புதுப்பிக்கப்பட்ட சமூக ஒப்பந்தத்திற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அழைப்புடன் நெருக்கமாக இணைந்துள்ள சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கண்ணியமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் தேசிய முயற்சிகள் மீண்டும் வலியுறுத்தப்பட்டன.

இந்த விஷயத்தில் இந்தியாவின் நேர்மறையான அனுபவத்தை எடுத்துரைத்த திருமதி தவ்ரா, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு கீழ்க்கண்டவை குறித்து எடுத்துரைத்தார்:

•          வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பு வறுமையின் அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய குறிப்பிடத்தக்க முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. இது கடந்த 9 ஆண்டுகளில் 248 மில்லியன் தனிநபர்கள் பல பரிமாண வறுமையிலிருந்து தப்பிக்க வழிவகுத்தது. இது பல பரிமாண வறுமை குறியீட்டால் அளவிடப்படுகிறது.

•          தற்காலிக மதிப்பீடுகளின்படி 2016-17 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளில் அரசின் கொள்கைகள், திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் பொருளாதார நடவடிக்கைகளில் சுமார் 170 மில்லியன் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பொருளாதார போக்கு முக்கிய துறைகளில் நீடித்த வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நிரூபிக்கிறது என்று அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.

•          மேலும், இந்தியா தனது சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. இது சமீபத்திய சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முதன்மை உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2024-26 ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவில் சமூக பாதுகாப்பு கவரேஜை இரட்டிப்பாக்குவதை சுட்டிக்காட்டுகிறது. தவிர, நமது மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பொது விநியோக முறை, சுமார் 800 மில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை வழங்கும் உலகின் மிகப்பெரிய சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தப்பட்ட சமூக உதவித் திட்டங்களில் ஒன்றாகநன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

•          மேலும், கடந்த பத்தாண்டுகளில் நிதி உள்ளடக்கம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நிதிச் சேவைகளுக்கான அணுகலுக்கு முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மாற்றம் எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் அரசு  கோடிக்கணக்கான தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அதிகாரம் அளித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை வளர்த்துள்ளது.

•          பிரதமர் ஜன் தன் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் வங்கிக் கணக்கு  இல்லாதவர்களுக்கான நிதி இடைவெளியைக் குறைக்கின்றன, அதே நேரத்தில் பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம், பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டம் ஆகியவை மலிவான ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டை வழங்குகின்றன என்று நிர்வாக  குழு கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டது.

30 அக்டோபர் 2024 அன்று, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிர்வாக குழுவிற்குள் அதிக ஜனநாயகமயமாக்கலுக்கான முன்மொழிவு மீதான விவாதத்தின் போது, இந்தியா .எல்..வைப் பாராட்டியது. ஆனால் அதே நேரத்தில் .எல். மட்டுமல்ல, பிற .நா அமைப்புகளிலும் நிர்வாகத்தில் விரிவான சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தியது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சமூக நீதி மற்றும் நீடித்த மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உலகளவில் ஊக்குவிப்பதற்கான பகிரப்பட்ட தொலைநோக்கை நிறைவேற்ற ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவதை ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறை உறுதி செய்யும் என்று இந்தியா வலியுறுத்தியது. புவியியல் பன்முகத்தன்மை, மக்கள் தொகை மற்றும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு, .எல்..விற்குள் நியாயமான, மிகவும் சமமான மற்றும் சீரான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கான வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் கூறினார்.

*****

PKV/KV

 

 

 

 


(Release ID: 2070287) Visitor Counter : 52