விவசாயத்துறை அமைச்சகம்
சிறப்பு இயக்கம் 4.0 கடைசி வாரத்தில் வேளாண்மை, விவசாயிகள் நலத்துறையின் செயல்பாடுகள்
Posted On:
01 NOV 2024 5:46PM by PIB Chennai
அரசு அலுவலகங்களில் நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பதற்காக சிறப்பு இயக்கம் 4.0 நடத்தப்பட்டது. இதன் கடைசி வாரத்தில், தேசியத் தலைநகர் தில்லியில் அமைந்துள்ள அலுவலகங்களான தேசிய பயிர் முன்னறிவிப்பு மையம், பூசா, தேசிய விதைகள் நிறுவனம், பூசா, தேசிய கரிம மற்றும் இயற்கை விவசாய மையம், காசியாபாத், விரிவாக்க இயக்குநரகம், பூசா, கோதுமை மேம்பாட்டு இயக்குநரகம், குருகிராம், இந்திய மண் மற்றும் நிலப் பயன்பாட்டு ஆய்வகம், நொய்டா, சிறு விவசாயிகள் வேளாண்-வணிக கூட்டமைப்பு, ஹவுஸ் காஸ், மத்திய உரத் தரக் கட்டுப்பாடு மற்றும் பயிற்சி நிறுவனம், ஃபரிதாபாத் என இந்தத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சார்நிலை / இணைக்கப்பட்ட அலுவலகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்திறனை ஆய்வு செய்ய இத்துறையால் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்தக் குழுக்கள் சிறப்பு இயக்கம் 4.0-ன் போது இந்த அலுவலக வளாகங்களை ஆய்வு செய்தன.
2024, அக்டோபர் 31 அன்று முடிவடைந்த சிறப்பு இயக்கம் 4.0-ன் கடைசி வாரத்தில் துறையின் முன்னேற்றம் / சாதனைகள் பின்வருமாறு:
வ.எண்
|
செயல்பாடுகள்
|
இலக்குகள்
|
சாதனை
|
1
|
துய்மை இயக்க இடங்களின் எண்ணிக்கை
|
1791
|
1360
|
2
|
நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைக் குறிப்புகள்
|
50
|
19
|
3
|
நிலுவையிலிருந்த பொதுமக்கள் குறைகள்
|
22295
|
20549
|
4
|
நிலுவையிலிருந்த பொதுமக்கள் குறைகளின் மேல்முறையீடுகள்
|
698
|
506
|
5
|
ஆவண நிர்வாகம் (ஆய்வு செய்யப்பட்ட நேரடி கோப்புகள்)
|
53660
|
47950
|
6
|
ஆவண நிர்வாகம் (அகற்றப்பட்ட நேரடி கோப்புகள்)
|
18959
|
18959
|
7
|
விடுவிக்கப்பட்ட இடம் (பரப்பு சதுர அடியில்)
|
53761
|
|
8
|
ஈட்டப்பட்ட வருவாய் (தொகை ரூபாயில்)
|
3846455.00
|
|
*************
TS/SMB/RS/DL
(Release ID: 2070229)
Visitor Counter : 32