அறிமுகம்
உற்பத்தி சார்ந்த பல்வேறு தொழில்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல், வேலைவாய்ப்பு, மூலதன ஆக்கம், இதர காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தொழில்களின் அமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்து தகவல்களை வழங்கும் முதன்மை நோக்கத்துடன் வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது தேசிய, மாநில அளவுகளில் தேசிய கணக்கியல் புள்ளி விவரங்களுக்கு உள்ளீடுகளை வழங்குகிறது.
புள்ளியியல் - திட்ட அமலாக்க அமைச்சகம் ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான காலத்துக்கான (அதாவது நிதியாண்டு 2022-23), வருடாந்திர தொழில் ஆய்வு எனப்படும் ஏஎஸ்ஐ (ASI) முடிவுகளை இணையதள அட்டவணைகள் வடிவில் வெளியிட்டுள்ளது. ஏஎஸ்ஐ 2022-23-ன் கூறப்பட்ட அனைத்து அட்டவணைகளும் அமைச்சகத்தின் இணையதளமான https://www.mospi.gov.in -ல் உள்ளன.
ஏஎஸ்ஐ வெளியீடு:
ஏஎஸ்ஐ 2022-23 வெளியீடுகள் தொழில் துறையின் விரிவான முடிவுகளை இரண்டு தொகுதிகளாக கொண்டுள்ளன.
வெளியீட்டின் தொகுதி 1, மூலதனம், வேலைவாய்ப்பு, ஊதியம், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை, நடைமுறை மூலதனம், மொத்த உள்ளீடு, மொத்த உற்பத்தி, வேலைவாய்ப்பு விவரங்கள், தொழில்துறை துறை தொடர்பான பல்வேறு பொருளாதார அளவீடுகள் தொடர்பான புள்ளி விவரங்களை முன்வைக்கிறது.
தொகுதி 2-ல் மாநில / யூனியன் பிரதேச வாரியாக அதிகம் தயாரித்து நுகரப்படும் பொருட்கள், உற்பத்தி நிறுவனங்களால் உருவாக்கப்படும் தயாரிப்புகள், துணை தயாரிப்புகள், தொழில்துறை குறியீடு வாரியாக உள்ளது.
தொகுதி I அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.mospi.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தொகுதி II வெளியீடு பென் டிரைவ் / சிடி-ரோமில் கிடைக்கிறது.
"தொழிற்சாலைத் துறையின் தொகுப்பு முடிவுகள்" என்பது அமைச்சகத்தின் இணையத்தளமான www.mospi.gov.in-ல் பதிவேற்றப்பட்டுள்ளது.
ஏஎஸ்ஐ 2022-23-ன் பிரிவுகள் அளவிலான தரவுகளும் அமைச்சகத்தின் இணையதளமான https://www.mospi.gov.in -ல் உள்ளன.
***
TS/PLM/AG/DL