கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
29 OCT 2024 4:13PM by PIB Chennai
மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் இன்று சருசாஜாய் விளையாட்டு வளாகத்திலிருந்து 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில், நாட்டை ஒன்றிணைப்பதிலும், வலுவான மற்றும் வளமான நாட்டிற்கான அடித்தளத்தை அமைப்பதிலும் சர்தார் வல்லபாய் படேலின் விலைமதிப்பற்ற பங்களிப்பை திரு சோனாவால் எடுத்துரைத்தார்.
"இந்தியாவின் இரும்பு மனிதர்" சர்தார் வல்லபாய் படேல் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மீட்டெடுத்து, வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்ததாக அமைச்சர் கூறினார். சர்தார் படேலின் ஆசியுடன், பிரதமர் திரு. நரேந்திர மோடி 'ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்' என்ற குறிக்கோளுடன் நாட்டை வழிநடத்தி வருவதாக கூறினார். ஒற்றுமைக்கான ஓட்டம் வாயிலாக நீங்கள் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், சர்தார் படேலின் மகத்தான கொள்கைகளை கொண்டாடுவதை காண்பதில் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். பாரத ரத்னா சர்தார் படேலின் நீடித்த பங்களிப்புகள் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஓட்டத்தில் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும்பான்மையாக பங்கேற்றனர்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2069285)
Visitor Counter : 9