பாதுகாப்பு அமைச்சகம்
தற்சார்பை நோக்கிச் செல்லும் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட உற்பத்திப் புரட்சி
Posted On:
29 OCT 2024 11:21AM by PIB Chennai
அறிமுகம்
2024 அக்டோபர் 28 அன்று குஜராத்தின் வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) வளாகத்தில் டாடா விமான வளாகத்தின் திறப்பு விழா, பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல்லைக் குறிக்கிறது. சி -295 ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான இந்த ஆலை, இந்தியாவில் ராணுவ விமானங்களுக்கான முதல் தனியார் துறை உற்பத்தி ஆலை ஆகும். இது உள்நாட்டு உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. செயல்பாட்டுத் தயார்நிலையை வலுப்படுத்துதல், வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இந்த முயற்சி.
பாதுகாப்புத் தளவாட இறக்குமதியாளர் என்ற நிலையிலிருந்து உள்நாட்டு உற்பத்திக்கான வளர்ந்து வரும் மையமாக நாடு மாறியிருப்பது, பாதுகாப்பு உற்பத்தியில் தற்சார்புக்கான இந்தியாவின் அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி அதிகரிப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள், முன்முயற்சிகளை வெற்றிகரமாக அமல்படுத்தியதன் மூலம், 2023-24ம் நிதியாண்டில், பாதுகாப்பு உற்பத்தியின் மதிப்பு ரூ. 1,27,265 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014-15 ஆம் ஆண்டில் ரூ. 46,429 கோடியாக இருந்தது. இது சுமார் 174% அதிகமாகும்.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி அதிகரிப்பு
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2013-14-ம் நிதியாண்டில் ரூ. 686 கோடியிலிருந்து 2023-24 நிதியாண்டில் ரூ. 21,083 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்றுமதி மதிப்பில் 30 மடங்கு அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த சாதனைகள், பயனுள்ள கொள்கை சீர்திருத்தங்கள், முன்முயற்சிகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது.
பாதுகாப்புத் துறையில் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணம், இறக்குமதியை நம்பியிருப்பதிலிருந்து தன்னிறைவு பெற்ற உற்பத்தி மையமாக மாறி வருகிறது. பல்வேறு துறைகளில் இந்தியா தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வருவதால், உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு வலிமையான சக்தியாக தனது நிலையை உறுதிப்படுத்தி வருகிறது.
----
(Release ID 2069090)
TS/PLM/KPG/RR
(Release ID: 2069139)
Visitor Counter : 15