அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மொஹாலியில் பிரிக்-தேசிய வேளாண்-உணவு உயிரி உற்பத்தி நிறுவனத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைப்பார்
Posted On:
26 OCT 2024 11:49AM by PIB Chennai
வேளாண் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிரி பதப்படுத்துதலில் இந்தியாவின் திறன்களை வலுப்படுத்த, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் முன்முயற்சியாக, பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் பிரிக் - தேசிய வேளாண்-உணவு உயிரி உற்பத்தி நிறுவனத்தை (பிரிக்-நாபி) அரசு தொடங்க உள்ளது. இது மொஹாலியில் உள்ள தேசிய வேளாண்-உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (நாபி), புதிய கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டு உயிரி செயலாக்க மையம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு உத்திபூர்வ இணைப்பாகும். "விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல்" மற்றும் "இந்தியாவில் தயாரிப்போம்" முன்முயற்சியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அதிக மகசூல் தரும் பயிர்கள், நிலையான உயிரி உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் வளங்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதில் இந்தப் புதிய நிறுவனம் கவனம் செலுத்தும்.
இந்தியாவின் வேளாண்-உணவு மற்றும் உயிரி உற்பத்தித் துறையை வலுப்படுத்துவதாக உறுதியளிக்கும் புதிய நிறுவனத்தை 2024 அக்டோபர் 28 அன்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்து,நாட்டுக்கு அர்ப்பணிப்பார்.
உயிரி உற்பத்தி நிறுவனத்தின் புதிய வளாகத்தை தொடங்கி வைப்பதுடன், மொஹாலியில் உள்ள பிரிக்-நாபி வளாகத்தில் உயிரி நெஸ்ட் பிரிக்-நாபி ஆய்வு மையத்தையும் மத்திய அமைச்சர் தொடங்கி வைப்பார். வேளாண் மற்றும் உயிரி பதப்படுத்துதல் துறைகளில் தொழில்முனைவோரையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிப்பதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைக்கு இடையே உள்ள இடைவெளியை குறைப்பதில் இவை முக்கிய பங்காற்றும். உள்ளூர் இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை ஆதரிப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்த மையம் தொழில்முனைவோருக்கு அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகள், வழிகாட்டுதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை அளவிடுவதற்கும் சந்தைப்படுத்துவதற்கும் ஒரு வலுவான சூழல் அமைப்பை வழங்கும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் புதிய நிறுவனத்தின் இணையதள அறிவிப்பை வெளியிடுவார். பிரிக்-நாபியில் உருவாக்கப்பட்ட உயிரி உற்பத்தி தொழில்நுட்பங்களின் தொகுப்பையும் வெளியிடுவார்.
மத்திய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர், பிரிக்-நாபியின் செயல் இயக்குநர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068373
*****
SMB/ KV
(Release ID: 2068474)
Visitor Counter : 29