வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சைக்கிள் ரெட்ரோ-பிரதிபலிப்பு சாதனங்கள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020-ஐ தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) திருத்தியுள்ளது
Posted On:
26 OCT 2024 12:42PM by PIB Chennai
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை 2020 ஜூலை 9 அன்று அறிவிக்கப்பட்ட சைக்கிள் ரெட்ரோ-பிரதிபலிப்பு சாதனங்கள் (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2020-ல் திருத்தம் செய்துள்ளது. இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைக்கு வருகிறது.
17 அக்டோபர், 2024 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் சைக்கிள் ரெட்ரோ-பிரதிபலிப்பு சாதனங்கள் (தரக் கட்டுப்பாடு) உத்தரவில் பின்வரும் தளர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன:
ஒரு குறிப்பிட்ட விதியின் மூலம் அத்தகைய பொருட்கள் மற்றும் பொருட்களின் உற்பத்தியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கத்திற்காக 200 எண்ணிக்கையிலான சைக்கிள் ரெட்ரோ- பிரதிபலிப்பான்களை இறக்குமதி செய்ய விலக்கு அளிக்கப்படுகிறது
சில நிபந்தனைகளுக்குட்பட்டு, ஏற்றுமதி நோக்கங்களுக்காக இந்தியாவில் மிதிவண்டி உற்பத்தியாளர்கள் மிதிவண்டி பிரதிபலிப்பான்களை இறக்குமதி செய்வதற்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
சைக்கிள் ரெட்ரோ-பிரதிபலிப்பு சாதனங்கள் (தரக் கட்டுப்பாடு) திருத்த ஆணை, 2024 தரமான சூழல் மேம்பாட்டிற்கான பல முயற்சிகளில் ஒன்றாகும், முதலீடுகளை ஈர்த்தல், தயாரிப்பு தரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தொழில்முனைவோர் திறமைகளை வளர்த்தல். தரநிலைகளுக்கு இணங்கி நடப்பது ஆகியவை செயல்திறன், நீடித்து உழைக்கும் தன்மை, சார்புநிலை ஆகிய தளங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே, நுகர்வோர் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் உள்நாட்டு தயாரிப்புகள் குறிப்பிடத்தக்க சந்தைப் பங்கைக் கைப்பற்றும்.
2014 செப்டம்பரில் தொடங்கப்பட்ட மேக் இன் இந்தியா முன்முயற்சி, இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின் வெற்றிகரமான 10 ஆண்டுகளில், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் முன்முயற்சிகளில் ஒன்றாகும், இது இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் தரத்தை வலுப்படுத்துவதன் மூலம், தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் மேக் இன் இந்தியா முன்முயற்சியின் பரந்த இலக்குகளை ஆதரிக்கின்றன. உற்பத்தித் துறையில் நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068381
*****
SMB/ KV
(Release ID: 2068419)