மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மீன் வளர்ப்போர் நல்வாழ்வு துணைத் திட்ட அமலாக்கத்தை மேம்படுத்த மீன்வளத்துறை முக்கிய கூட்டத்தை நடத்தியது

Posted On: 26 OCT 2024 11:37AM by PIB Chennai

 

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறை 2024, அக்டோபர் 25   அன்று ஒரு முக்கிய கூட்டத்தை நடத்தியது. இதில், மீன்வளத்தில் தொழில்நுட்ப பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், புதிய துணைத் திட்டமான பிரதமரின் மீன் வளர்ப்போர் நல்வாழ்வு துணைத் திட்டம் உட்பட மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்  மீன்வள விரிவாக்க வலையமைப்பின் பங்கு குறித்து விவாதிக்கப்பட்டது. மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ்  லிக்கி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை , இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் , மீனவர் சேவை மையங்கள், வேளாண் அறிவியல் மையங்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் மீன்வளத் துறை  அதிகாரிகள், முக்கிய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள்  இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மீன்வள விரிவாக்கத்தின் முக்கிய பங்கை டாக்டர் அபிலக்ஷ் லிக்கி தமது முக்கிய உரையில் அடிக்கோடிட்டுக் காட்டினார்அத்தியாவசிய தகவல், வளங்கள் மற்றும் அரசு ஆதரவுடன் மீன் விவசாயிகளை இணைப்பதன்  முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால்வளம் ஆகியவற்றில் விரிவாக்கம்  மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க சமீபத்தில் அமைக்கப்பட்ட உயர்மட்ட அமைச்சர்கள் குழு, உயர்மட்ட செயலாளர்கள் குழு பற்றியும் டாக்டர் லிக்கி குறிப்பிட்டார்.

மீன்வளத் துறையின் இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா, பிரதமரின் மீன் விவசாயிகள் நலத் திட்டத்தின் கூறுகள் மற்றும் நன்மைகள் குறித்தும், நாடு முழுவதும் இத்துறையின் திட்டங்களின் உத்தேச பயனாளிகளை சென்றடைவதில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் விரிவாக்க வலையமைப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். விவசாய மேம்பாட்டுத் துறை மற்றும் விவசாய வளங்கள் அமைப்பின் இணைச் செயலாளர் திரு சாமுவேல் பிரவீன் குமார், இந்தியாவில் வேளாண் விரிவாக்க முறை குறித்து செயல்விளக்கம் அளித்து, வேளாண் வளங்களை அணுகுவதற்கான மெய்நிகர் ஒருங்கிணைந்த அமைப்பு முயற்சிகள் குறித்து விளக்கினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068367

*****

SMB/ KV

 

 

 

 




(Release ID: 2068396) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi