தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
Posted On:
25 OCT 2024 5:20PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) "டிஜிட்டல் இணைப்புக்கான பண்புகளின் மதிப்பீட்டு ஒழுங்குமுறைகள், 2024" என்ற விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் முழு விவரம் டிராய் இணையதளத்தில் www.trai.gov.in கிடைக்கிறது.
கட்டிடங்களுக்குள் டிஜிட்டல் இணைப்பின் தரம் குறித்த சிக்கலைத் தீர்ப்பதற்கான கொள்கை மற்றும் ஒழுங்குமுறை தூண்டுதலை வழங்குவதற்காக, ஆணையம் 20 பிப்ரவரி 2023 அன்று "டிஜிட்டல் இணைப்புக்கான கட்டிடங்கள் அல்லது பகுதிகளின் மதிப்பீடு" குறித்த பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. எந்தவொரு வளர்ச்சிப் பணிக்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பு (டி.சி.ஐ) இணை உருவாக்கத்திற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்த பரிந்துரைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், கட்டிடங்கள் அல்லது பகுதிகளில் DCI-ஐ இணைந்து உருவாக்க ஏதுவாக, மாதிரி கட்டிட துணைவிதிகளின் ஒரு பகுதியாக, DCI மேம்பாட்டை சேர்க்க ஆணையம் பரிந்துரைத்துள்ளதுடன், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கட்டிடங்களுக்கு DCI-ன் தேவைகளை உள்ளடக்கிய "கட்டிடங்களில் டிஜிட்டல் இணைப்பு உள்கட்டமைப்பு" என்ற தலைப்பில் ஒரு வரைவு அத்தியாயத்தை பரிந்துரைத்துள்ளது. பெரும்பாலான தரவு நுகர்வு உட்புறத்தில் அல்லது பொது வளாகங்களில் நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. அதே நேரத்தில், 5 ஜி தொழில்நுட்பத்தின் வருகையால், தரவு நுகர்வின் அளவு மற்றும் வேகம் அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மேற்கூறிய பரிந்துரைகளின் ஒரு பகுதியாக, கூட்டு மற்றும் சுய-நிலையான அணுகுமுறை மூலம் சிறந்த டிஜிட்டல் இணைப்பை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக, டிஜிட்டல் இணைப்புக்கான கட்டிடங்கள் அல்லது சொத்துக்களை மதிப்பிடுவதற்கான கட்டமைப்பைக் கொண்டுவரவும் ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, தற்போதுள்ள மற்றும் வருங்கால வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிஜிட்டல் இணைப்பு அனுபவத்தை வழங்குவதற்காக, சொத்து மேலாளர்களை ஊக்குவிப்பதற்கும் தூண்டுவதற்கும் இந்த விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன. சிறந்த மதிப்பீடுகளைக் கொண்ட ஒரு சொத்து அதிக பயனர்கள், வாங்குபவர்கள் அல்லது முதலீட்டாளர்களை ஈர்க்கும், இதன் மூலம் சொத்துக்களுக்கு மதிப்பு சேர்க்கும்.
இந்தியாவில், 927.56 மில்லியன் கம்பியில்லா இணைய சந்தாதாரர்கள் உள்ளனர், 42.04 மில்லியன் இணைய சந்தாதாரர்கள் (ஜூன் '2024 நிலவரப்படி) தங்கள் வீடுகள் அல்லது அலுவலகங்களில் கம்பி வழி இணைப்பைக் கொண்டுள்ளனர். இதனால், தற்போது, பெரும்பாலான மக்கள் இணையத்தை அணுக கம்பியில்லா கட்டமைப்பை நம்பியுள்ளனர்.
4 ஜி (எல்டிஇ) நெட்வொர்க்கின் குறிப்பிடத்தக்க சேவை மற்றும் 5 ஜி கட்டமைப்பின் அறிமுகம், அதிக அலைகற்றை பேண்டுகள் கிடைப்பது, கட்டிடங்களுக்குள் டிஜிட்டல் இணைப்பின் கவரேஜ் மற்றும் தரம் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இது சேவை வழங்குநர்கள் மற்றும் சொத்து மேலாளர்களின் ஒத்துழைப்பு மூலம் பெரும்பாலும் தீர்க்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068149
***
TS/MM/AG/DL
(Release ID: 2068225)
Visitor Counter : 16