எரிசக்தி அமைச்சகம்
லடாக்கின் சுஷுலில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்க என்டிபிசி-யும் ராணுவமும் இணைந்து செயல்படுகின்றன
प्रविष्टि तिथि:
25 OCT 2024 4:59PM by PIB Chennai
லடாக்கின் சுஷுலில் சூரிய ஹைட்ரஜன் அடிப்படையிலான நுண் மின்சார கிரிட்டை நிறுவ தேசிய அனல் மின் கழகமான என்டிபிசி ராணுவத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையில் ஆஃப்-கிரிட் ராணுவ இடங்களில் பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்தி நிலையான மின்சாரம் வழங்கப்படும். பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், காணொலி காட்சி மூலம் இந்த தனித்துவமான திட்டத்திற்கு இன்று (25.10.2024) அடிக்கல் நாட்டினார்.
என்டிபிசி இந்த புதுமையான சூரிய ஹைட்ரஜன் அடிப்படையிலான மைக்ரோகிரிட் அமைப்பை தன்னாட்சி முறையில் வடிவமைத்துள்ளது, ஹைட்ரஜனை மின் சேமிப்பு ஊடகமாகப் பயன்படுத்தி ஆண்டு முழுவதும் 200 கிலோவாட் மின்சாரத்தை இது வழங்கும். இந்த அமைப்பு ஆஃப்-கிரிட் ராணுவ இடங்களில் தற்போதுள்ள டீசல் ஜென்செட்டுகளை மாற்றியமைத்து மின்சாரம் வழங்கும். கடுமையான குளிர்கால நிலைமைகள் இருந்தபோதிலும் நிலையான மின்சாரத்தை இது வழங்கும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தின் பராமரிப்பை, என்டிபிசி 25 ஆண்டுகளுக்கு மேற்கொள்ளும்.
லடாக்கின் குறைந்த வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டம் பசுமை ஆற்றலின் உற்பத்தியையும், பயன்பாட்டையும் எளிதாக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068135
***
TS/PLM/RS/DL
(रिलीज़ आईडी: 2068204)
आगंतुक पटल : 87