இடுகை இடப்பட்ட நாள்:
24 OCT 2024 5:56PM by PIB Chennai
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று நடைபெற்ற 2-வது ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டத்தில் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் திரு ஜேசன் கிளேர், திறன் மற்றும் பயிற்சித் துறை அமைச்சர் திரு. ஆண்ட்ரூ கைல்ஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு பிரதான், அறிவுசார் பாலங்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், புதிய அடித்தளத்தை அமைப்பதற்கும், ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் பிரகாசமான எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கும் இந்தக் கூட்டம் ஒரு முக்கியமான தளமாக மாறியுள்ளது என்றரர்.
இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் பொருளாதார வளத்தை உருவாக்கவும், மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே நீடித்த தொடர்புகளை வளர்க்கவும் கல்வியும் திறன்களும் உந்து சக்தியாக இருக்கும் என்று திரு தர்மேந்திர பிரதான் கூறினார்.
பள்ளி, திறன்கள், உயர் கல்வி என கல்வியின் அனைத்து நிலைகளிலும் ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான இருதரப்பு கூட்டாண்மையை இந்த சந்திப்பு வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலியா-இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சிலின் அடுத்த கூட்டம் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, திரு பிரதான் 2024 அக்டோபர் 22 முதல் 26 வரை ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொள்கிறார். கல்வியில் பரஸ்பர ஆர்வமுள்ள முக்கிய பகுதிகளில் ஒத்துழைப்பு, பங்கேற்பு மற்றும் ஒருங்கிணைப்பை இந்தப் பயணம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் ஆராய்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்காக இந்த வார தொடக்கத்தில் அக்டோபர் 20-21 தேதிகளில் திரு பிரதான் சிங்கப்பூருக்கு பயணம் செய்து பிரதமர், துணைப் பிரதமர், கல்வி அமைச்சர் மற்றும் பிற பிரமுகர்களை சந்தித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067814
***
(Release ID: 2067814)
SMB/DL