மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

21-வது கால்நடை கணக்கெடுப்பு நடவடிக்கையை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 24 OCT 2024 5:10PM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் 21-வது கால்நடை கணக்கெடுப்பு நடவடிக்கையை 25 அக்டோபர் 2024 அன்று காலை 10:00 மணிக்கு புதுதில்லியில் ஹோட்டல் லீலா ஆம்பியன்ஸ் மையத்தில்  தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்கள் திரு பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மற்றும் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் ஜி20 ஷெர்பா திரு அமிதாப் காந்த் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கிறார்கள்.

கால்நடை கணக்கெடுப்பு 1919-ம் ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் ஒரு முக்கியமான பணியாகும். இது கால்நடை பராமரிப்புத் துறையில் கொள்கை வகுப்பதற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முக்கியத்துவமான தகவலாக செயல்படுகிறது. நாடு முழுவதும் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றிய விரிவான தகவல் தரவை இந்த கணக்கெடுப்பு சேகரிக்கிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2019-ம் ஆண்டில் நடத்தப்பட்டது.

அக்டோபர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த 21 ஆவது கால்நடை கணக்கெடுப்பு மாநில/யூனியன் பிரதேசங்களின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையுடன் இணைந்து நடத்தப்படும். அகில இந்திய அளவில், சுமார் 1 லட்சம் கள அதிகாரிகள், பெரும்பாலும் கால்நடை மருத்துவர்கள் அல்லது துணை கால்நடை மருத்துவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

பசுவினம், எருமை, யாக், செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி, ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை, கழுதை, நாய், முயல் மற்றும் யானை ஆகிய 15 வகையான கால்நடைகளின் விவரங்கள் இக்கணக்கெடுப்பில் இடம் பெற்றுள்ளன. கால்நடைகள் தவிர, கோழி, வாத்து, வான்கோழி காடை, கினி கோழி, நெருப்புக்கோழி மற்றும் ஈமு ஆகிய பறவைகளின் எண்ணிக்கையும் சேர்த்துக்கொள்ளப்படும்*

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2067760  

***

TS/IR/RS/DL


(Release ID: 2067873)
Read this release in: English , Urdu , Hindi