ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம்-3-ன் கீழ் நாகாலாந்தில் ரூ.54.75 கோடி மதிப்பீட்டில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 24 OCT 2024 4:37PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்தியத்தில் கிராமப்புற போக்குவரத்தை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, நாகாலாந்து மாநிலத்திற்கு ரூ. 54.75 கோடி முதலீட்டில் 55.89 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளுக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டம்-3ன் கீழ், 489.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 506.69 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் 40 சாலைகளுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

- சுகாதாரம், கல்வி மற்றும் சந்தைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்

- தொலைதூர கிராமங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கிராமப்புறங்களில் போக்குவரத்தை மேம்படுத்துதல்.

- பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகத்தை வளர்த்தல்

- வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067723

***  



TS/IR/RS/KR/DL


(रिलीज़ आईडी: 2067808) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Manipuri