பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047க்குள் "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற பிரதமரின் கனவை நனவாக்குவதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும்: அமைச்சர் திரு ஹர்தீப் எஸ் பூரி

Posted On: 23 OCT 2024 6:09PM by PIB Chennai

எரிசக்தி, இயற்கை வளங்கள் வருடாந்திர கண்டுபிடிப்பு மற்றும் எரிசக்தி மாநாட்டில் உரையாற்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி, எரிசக்தித் துறை மாற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் முக்கிய பங்கை சுட்டிக் காட்டினார். "எரிசக்திக்கான செயற்கை நுண்ணறிவு" என்ற கருப்பொருளுடன், செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, சரியான நேரத்தில், மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் மேலும் விளக்கினார். செயற்கை நுண்ணறிவானது மேற்கொள்ளும் செயல்பாடுகளில் புரட்சியை ஏற்படுத்தவும், செயல்திறனை அதிகரிக்கவும், மேலும் நிலையான எரிசக்தி நிலப்பரப்பை நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்தவும் உருக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு எவ்வாறு அனைத்து தொழில்களிலும் விரைவாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், 2047-ம் ஆண்டுக்குள் "வளர்ச்சியடைந்த பாரதம்" என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க  இது கருவியாக இருக்கும் என்றார்.

ஜே.பி. மோர்கனின் ஆராய்ச்சியை மேற்கோள் காட்டி, பேசிய அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 7-10 டிரில்லியன் டாலராக அதிகரிப்பதில் செயற்கை நுண்ணறிவு திறனின் பங்கு பற்றி அமைச்சர் விவாதித்தார். இது தொழிலாளர் உற்பத்தித்திறனில் பெருமளவு ஊக்கத்திற்கு வழிவகுத்து உலகப் பொருளாதாரத்தை மறுவடிவமைக்கவும் வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067399

***

 TS/IR/RS/DL




(Release ID: 2067485) Visitor Counter : 16


Read this release in: English , Urdu , Hindi