திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
உலகத் திறன்கள் போட்டி 2024-ல் வெற்றியாளர்களை மத்திய இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி நாளை கௌரவிக்கிறார்
Posted On:
23 OCT 2024 5:45PM by PIB Chennai
புதுதில்லியில் நாளை (24.10.2024) நடைபெறும் பாராட்டு விழாவில், திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி பங்கேற்று உலகத் திறன்கள் போட்டி 2024-ல் சாதனை புரிந்த இந்தியக் குழுவினரைக் கௌரவிக்க உள்ளார்.
பிரான்சில் உள்ள லியோனில் நடைபெற்ற உலக திறன்கள் போட்டி 2024-ல் பல்வேறு பிரிவுகளில் நான்கு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றது. இதன் மூலம் இந்தியா உலக அரங்கில் குறிப்பிடத்தக்க அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
மேலும், இந்தியக் குழுவினர் 12 சிறப்பு பக்கங்களையும் வென்றனர். இது பல்வேறு பிரிவுகளில் இந்தியக் குழுவின் தனித்துவமான திறமைக்கும் நிலையான செயல்திறனுக்கும் சான்றாக விளங்குகிறது. உலகத் திறன்கள் போட்டி 2024-ல் இந்தியாவின் செயல்திறன் உலக அரங்கில் வலுவாக இருந்தது. சீனா, ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பிற உலகளாவிய முன்னணி நாடுகளுடன் இந்தியா போட்டியிட்டு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர் திரு அதுல் குமார் திவாரி, தேசிய திறன் மேம்பாட்டு வல்லுநர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
----
TS/PLM/KPG/DL
(Release ID: 2067484)
Visitor Counter : 38