தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
உலக அளவில் தர மேம்பாட்டு செயல்முறைகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது: சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியங்களின் (ITU) தரப்படுத்தல் துறையின் (ITU-T) அனைத்து 10 ஆய்வுக் குழுக்களிலும் (SG) தலைமைப் பதவிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
Posted On:
19 OCT 2024 6:38PM by PIB Chennai
தொழில்நுட்பத் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதுடன் உலக அளவில் தர நிர்ணய மேம்பாட்டு செயல்முறையை வழிநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியங்களின் (ITU) தரப்படுத்தல் துறையின் (ITU-T) அனைத்து 10 ஆய்வுக் குழுக்களிலும் (SG) இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தியா ஒரு குழுவில் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டாலும், மற்ற 9 ஆய்வுக் குழுக்கள் மற்றும் எஸ்சிவி குழுவில் துணைத் தலைவர் பதவிகளைப் பெற்றது. இதன் மூலம் ஐடியூ-டி-யில் இந்தியாவில் தலைமைப் பதவிகள் 11 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா தற்போது சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியங்களின் (ஐடியூ - ITU) உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் கூட்டம் (டபிள்யுடிஎஸ்ஏ -WTSA) 2024-ஐ புதுதில்லியின் பாரத் மண்டபத்தில் நடத்துகிறது. இது அக்டோபர் 15 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. இது அக்டோபர் 24 வரை நடைபெறும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் டபிள்யுடிஎஸ்ஏ நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் இது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு (2024-2028) ஐடியூ-டி மற்றும் அதன் பணிகளின் தரப்படுத்தல் நடவடிக்கைகளின் போக்கை நிர்ணயிக்கும். இந்த ஆண்டு டபிள்யுடிஎஸ்ஏ-வில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3700 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இது எந்தவொரு டபிள்யுடிஎஸ்ஏ கூட்டத்தையும் விட எண்ணிக்கையில் மிக உயர்ந்தது.
டபிள்யுடிஎஸ்ஏ-வில் நடந்து வரும் விவாதங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தரப்படுத்தல் நடவடிக்கைகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் குறியாக்கவியல், மெடாவெர்ஸ், ஓவர்-தி-டாப் (OTT) சேவைகள், நிலையான டிஜிட்டல் மாற்றம் போன்ற தலைப்புகளில் புதிய ஐடியூ-டி தீர்மானங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றன. இது தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும்,, பாதுகாப்பான, உள்ளடக்கிய டிஜிட்டல் உலகத்தை உறுதி செய்வதிலும் முக்கியமானதாக இருக்கும். ஐடியூ-டி-யின் பணிகள் அதன் 10 ஆய்வுக் குழுக்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.
தலைமைப் பதவிகள்:
டபிள்யுடிஎஸ்ஏ-24-ன் போது, பங்கேற்கும் நாடுகள் பல்வேறு ஆய்வுக் குழுக்களின் தலைமைப் பதவிகளைத் தேர்ந்தெடுத்தன. அனைத்து ஐடியூ-டி ஆய்வுக் குழுக்களிலும் முக்கிய தலைமைப் பொறுப்புகளைப் பெற்று, உலகளாவிய தொலைத்தொடர்புச் சூழலில் இந்தியா தனது நிலையை கணிசமாக வலுப்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டபிள்யுடிஎஸ்ஏ-24 மாநாட்டில், இந்தியா 11 தலைமைப் பதவிகளைப் பெற்றுள்ளது. இதில் ஐடியூ-டி எஸ்ஜி-11-க்கான 1 தலைவர் பதவியும் 10 துணைத் தலைவர் பதவிகளும் அடங்கும்.
*****
PLM/ KV
(Release ID: 2066392)
Visitor Counter : 54