தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேசிய மனித உரிமைகள் ஆணைய நிறுவன தினம் மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகள் குறித்த தேசிய மாநாடு

இடுகை இடப்பட்ட நாள்: 18 OCT 2024 4:21PM by PIB Chennai

தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில், அந்த ஆணையத்தின்  31-வது நிறுவன தினம்  மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகள் குறித்த தேசிய மாநாடு புதுதில்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் மனித உரிமைகள் வரலாறு ஈடு இணையற்றது என்றார். மனித உரிமைகளைப் காப்பதில், குறிப்பாக சிறுபான்மையினர், நலிந்த பிரிவினர் மற்றும் சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களின் நலனைக் காப்பதில், மற்ற நாடுகளைவிட இந்தியா முன்னணியில் இருப்பதாக கூறினார். எங்காவது ஓரிரு இடங்களில் நிகழும் சம்பவங்கள் இந்தியாவின் சிறப்பை பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியாவின் நாகரீகமான பங்களிப்பை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், உலகின் பிற பகுதிகளில் நிகழும் மனித உரிமைகள் மீறல் குறித்து உலக நாடுகள் அமைதியாக இருப்பது குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066079

***

MM/KPG/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2066134) வருகையாளர் எண்ணிக்கை : 90
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी